இதழியல், Journalism

உணவு உடை உறைவிடம் மூன்றும் மனித இனத்தின் அடிப்படை தேவை. அதை பூர்த்தி செய்வதற்கு அடிப்படை தகவல் தொடர்பு. தகவல்களை பிறரிடம் தெரிவித்து பெற்றுக் கொள்வதன் மூலமே மனிதனின் வாழ்க்கை இயங்குகிறது. தொடர்புகொள்வதின் வழியாகத்தின் தனிமனிதனும் சமூகமும் தனது இலக்குகளையும், தேவைகளையும் அடைந்து கொள்ள முடிகிறது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ஊடகத்துறை இப்போது மனிதர்களை வழிநடத்துகின்ற, அழுத்தம் கொடுக்கின்ற ஒரு துறையாக மாற்றமடைந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் தனது பொறுப்பையும் கடமையையும் துறந்து பணத்திற்காக, அதிகாரத்திற்காக, விளம்பரத்திற்காக விலை போகக் கூடாது. ஊடகத்தில் பணிபுரியும் உண்மையான பத்திரிக்கையாளன் நிகழ்வுக்கும் செய்திக்கும் இடையிலான தகவலை சமூக அக்கறையுடன் தரவேண்டும்.
உயிர்ப்புடன் இயங்கும் மனித சமூகத்தின் மீது பேரன்பு கொண்டவர்கள் ஊடகத்தில் இருக்கும்போதுதான் மனித சமூகம் சுமூகமான சமாதான வாழ்கை வாழும். செய்திகள் சாதி மதம் இனம் சாராமல் அரசியல்வாதிகளை சாராமல் இருக்கவேண்டும். அதற்கு தைரியமும் துணிச்சலும் சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும்.
சமூகப் பொறுப்புள்ள மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய துறைகளில் ஒன்றுதான் இதழியல் - ஊடகத்துறை படிப்பு. இதழியலின் பல்வேறு துறைகளைப் பற்றிக் கற்றுத் தருவதே இதழியல். இதில் படைப்புத்துறை மற்றும் தொழில்துறை என்று இரு பிரிவுகள் இருக்கின்றன.
பி.ஏ.இதழியல் முடித்தவர்கள் சென்னையில் உள்ள ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் (ACJ)-ல் நடைபெறும் முதுகலை டிப்ளமோ. Postgraduate Diploma Programme (Print, New Media, Television, Radio) படிக்கலாம். மேலும் மதுரை காமராஜர், மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஊடகத் துறை சார்ந்த ஏராளாமான பட்ட மேற்படிப்புகள் உள்ளன