கட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு

உழவு, நெசவு ஆகிய தொழில்கள் போல சிவில் எஞ்சினியரிங்கும் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வருகிறது. அனுபவ பாடமாக விளங்கிய இந்த படிப்பு, பரம்பரை பரம்பரையாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. கிரேக்க கட்டடக் கலை, மொகலாய கட்டடக் கலை என ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட சிறப்பு இருந்தாலும், நல்ல பேராசிரியர்கள் இருந்தாலும், மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளில் சிவில் படிப்பை ஏற்கத் தயங்கினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் அருகியிருந்த வேலை வாய்ப்பு. அரசுத்துறைகளில் அப்போது போதிய அளவு ரெக்ரூட்மெண்ட் இல்லை. தொழிற்சாலைகளிலும் அனுபவமிக்க டிப்ளமோ பொறியாளர்களையே பயன்படுத்தினார்கள்.
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் சிவில் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றைச் சமாளிக்க மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேவை என்பதால் சிவிலுக்கு டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பொறியியல் டிசைன் / கன்சல்டிங் என கட்டடக் கலை கலைஞர்களிடம் உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளன.
வளைகுடாவைப் பொறுத்த வரையில் இந்தியர்களால் நடத்தப்படும் கட்டுமான நிறுவனங்கள், அரபு நிறுவனங்கள், ஐரோப்பியர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் கட்டடக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் வளமாக இருக்கிறது. அவர்கள் பி.ஆர்க். / பி.பிளான்./ பி.ஈ. (சிவில்) படித்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய கட்டடக் கலை
வரலாற்றாசிரியர் பெர்ஸி ப்ரௌன் முகலாயர்களது கட்டடக்கலை பற்றி கூறும் போது,' மொகலாயர்களைப் போல் கட்டடக்கலையைப் பேணி வளர்த்தவர்களை வரலாற்றில் காண்பதரிது' எனக்குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் புகழ்பெற்ற பல கலைகளுள் கட்டிடக் கலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வரலாற்றில் பல காலகட்டங்களில் கட்டிடக்கலை பலவிதமான மாறுதல்களைக் கண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றளவும் காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.
இஸ்லாமியர்கள் இந்தியாவினுள் 12ம் நூற்றாண்டில் நுழைந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்திய கட்டிடக்கலையில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். இவர்களது வரவுக்குப் பின்னர் இந்தியக் கட்டடக் கலையினுள் சில புதிய உத்திகள் புகுத்தப்பட்டன.
மேலும் கட்டிடம் கட்டுவதில் சில விஞ்ஞானப் பூர்வ முயற்சிகள் செய்தனர். இதன் காரணமாகத்தான் இன்றளவும் அந்தக் கட்டிடங்கள் எந்த வித சேதாரமும் இன்றித் திடமாக இருக்கின்றன. இதுபோன்று இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக் கலையும் இஸ்லாமிய முறையும் கலந்து உருவாகிய புதிய கட்டிடக் கலை, தமிழ்நாட்டில் திராவிடக் கட்டடக் கலையை உள் வாங்கி இஸ்லாமியர்கள் மேம்படுத்திய கட்டடக் கலை இந்திய இஸ்லாமியக் கட்டடக்கலை என்று அழைக்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சியின்போது ஆட்சியாளர்கள் தமது கட்டடங்களை அமைக்க உள்நாட்டு கட்டட மாதிரியையே பின்பற்றினர். தமது தேவைக்கு ஏற்ற விதத்தில் மட்டும் அந்த அமைப்பில் மாற்றங்களைச் செய்து கொண்டனர். எனவே, அவர்களது கட்டடக்கலை ஹிந்து, ஜைன, முஸ்லிம் மாதிரிகளின் கலப்பாக விளங்கியது.
+2 படிப்பிற்கு பிறகு இளங்கலையில் பி.ஆர்க். / பி.பிளான்./ பி.ஈ. (சிவில்) படித்தவர்கள் மேற்படிப்பாக இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பை உலகின் பல நாடுகளில் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் படிக்கலாம்..