விவசாயப் படிப்புகள்

எல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக இப்போது வேளாண்மை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் விவசாய நிலங்கள் வெகு வேகமாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், விளைநிலம் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விளைபொருட்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.

இந்த சூழலில் விவாசயக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதன் மூலம் நாட்டையும், உங்களையும் நன்றாக வளரச் செய்ய இயலும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறைந்த இடங்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.
மண் வளம், விதை உற்பத்தி, விவசாய விளைபொருட்கள் பெருக்கம், விளைநிலங்களை மேம்படுத்துதல் போன்ற பாடங்கள் இதில் கற்பிக்கப்படுகின்றன.
அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக் கிடக்கின்றன. விவசாய படிப்பில் சேர இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், டிப்ளோம படிப்பு, ஆராய்ச்சி படிப்பு என வேளாண்மையில் பல்வேறு படிப்புகள் உள்ளன.
அடிப்படை தகுதி :
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் ஆகிய பிரிவுகளை படித்திருக்க வேண்டும். இந்த நான்கு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம்.
ஒவ்வொரு வங்கியிலும் வேளாண்மை அதிகாரிப் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நன்கு ஜொலித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேறுகிறார்கள். எனவே, வேளாண்மை பட்டப் படிப்பு சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
கோவையில் உள்ள தமிழக விவசாய பல்கலைக் கழகம் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்த பல்லைக்கழகத்தின் கீழ் 10 கல்லூரிகள், 34 விவசாய ஆய்வு நிறுவனங்கள், 15 விவசாய அறிவியல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம்தான். கவுன்சலிங் மூலம் தகுதியான பாடப் பிரிவு கிடைக்கும்.
கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்
Bsc, agriculture
BS, Agribusiness Management
B.Tech, Biotechnology
B.Tech Horticulture -
B.Tech in Energy and Environmental Engineering
B.Tech, Bioinformatics
B.Tech, Agriculture Information Technology
கீழ்க்கண்ட விவசாய கல்லூரிகளில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் படிப்பு உள்ளது.
- மதுரை விவசாய கல்லூரி
- கிள்ளிகுளம் விவசாய கல்லூரி
- திருச்சி அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லூரி
- காரைக்கால் ஜவஹர்லால் நேரு விவசாய கல்லூரி
- பொள்ளாச்சி வானவராயர் விவசாய கல்லூரி
- பெரம்பலூர் தந்தை ரோவர் விவசாய கல்லூரி
- வேலூர் ஆதிபராசக்தி விவசாய கல்லூரி
தமிழகத்தில் உள்ள பிற விவசாய கல்வி நிறுவனங்களும் படிப்புகளும்
- பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி- பி.எஸ்சி., ஹார்டிகல்சர்
- மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி- பி.எஸ்சி., பாரஸ்டரி
- குமுளூர் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் கல்லூரி - பி.எஸ்சி., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்
- மதுரை ஹோம்சயின்ஸ் கல்லூரி - பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ்
- வேலூர் ஆதிபராசக்தி விவசாய கல்லூரி - பி.எஸ்சி., ஹார்டிகல்சர்