இளங்களலை அராபிக் (BA. Arabic)

download 1
உலகின் செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் அரபு மொழி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் வாழும் மக்களுக்கு தாய்மொழியாக விளங்குகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் அரபு மொழியில் தான் இறக்கப்பட்டுள்ளது. எனவே இது சிறப்பிற்குறிய மொழியாக கருதப்படுகிறது. அரபு மொழி படித்தவர்கள்கள் பள்ளிவாசல்கள், கல்விக் கூடங்களில் வேலை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்ற குறுகிய மனநிலை இருக்கிறது. அரபி மொழியை படிப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை அதன் அசல் வார்த்தைகளில் விளங்கிக் கொள்ளும் பெரும் பேறு பெற்றவர்கள், நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வாழ்வியல் தத்துவங்களை அதன் மூலத்திலேயே விளங்கிக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் மேலும் அவர்கள் விளங்கிய கருத்துக்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு இஸ்லாத்தின் செய்திகளை எடுத்துச் சொல்லும் வகையில் மறுமையில் வளமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு.
அத்தோடு தங்களது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத் தேவைகளைப் நிவர்த்தி செய்யவும் அரபு மொழி உதவுகிறது.
உங்களுடைய பிள்ளைகளின் வேலைவாய்ப்புகளை வளைகுடா நாட்டில் அமைத்துத் தர அவர்களை இளங்களலை அராபிக் (BA. Arabic) படிக்க ஆர்வமூட்டுங்கள். மூன்று வருட இளங்கலை படித்த பின் 2 வருட முதுகலையும் அரபிக் படித்தால் இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன BA.Arabic படிக்கும் போதே கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில மொழி அறிவையும் வளர்த்துக் கொள்பவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.

அரபி மொழி எழுதவும், படிக்கவும் தெரியாத காரணத்தால் போதிய கல்வித்தகுதி இருந்தும் அதற்குத் தகுந்தாற் போல வேலைவாய்ப்புகள் அமைவதில்லை. பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வளைகுடா நாடுகளில் வந்து சாதாரண பணியாளர்ளுக்குக் கிடைக்கும் ஊதியத்தைவிட மிகக் குறைந்த ஊதியத்திற்கு பணிபுரியும் நிலை நிலவி வருகின்றது.
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு நாடுகளான எக்ப்தியர்கள், லெபனான், சிரியா, யமன் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் வேலைவாய்ப்புகளுக்காக மக்கள் அணிதிரண்டு வருகின்றார்கள். எந்த அடிப்படைக் கல்வித்தகுதியும் அவர்களிடத்தில் இல்லை எனினும் மொழி அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை சிறந்ததாக தக்கவைத்துக் கொள்கின்றனர். எனினும் அவர்களுக்கு இலக்கண மற்றும் இலக்கிய நடையில் அலுவலகம் சார்ந்த கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்க இயலாதவர்களாகத்தான் இருக்கின்றனர்.
அரபியில் இளங்கலையும், முதுகலையும் படித்து தரமானவர்களாக செல்லும் மக்களுக்கு இந்த உலகத்திலும் பலன் அதிகமுண்டு.
தமிழகத்திலும் அரபி மொழி மொழி பெயர்ப்பாளர்களுக்கான இடம் வெற்றிடமாகவே உள்ளது. மொழி பெயர்ப்புத் திறனோடு படித்து வருபவர்களுக்கு இங்கேயும் பலனுள்ள வேலைகள் காத்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அரபு மொழியில் ஆர்வமுள்ளவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் படிப்பு அமைந்துள்ளது.
BA. Arabic இளங்கலைப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மற்றும் சென்னை நீயூ காலேஜ் ஆகியவற்றில் இருக்கின்றது.