சட்டம் படித்த சாதனையாளர் சயத் ஹஸன் இமாம்.

c353
இந்திய விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் நான்கு இஸ்லாமியர்கள் தலைமைக்கு வந்து புகழ் பெற்றவர்கள். முதலாமவர் பக்ருத்தீன் தையாப்ஜீ, ரகீமதுல்லாஹ். எம். சயானி, நவாப் சையத் முஹம்மத் பகதூர் அடுத்தது சையது

ஹஸன் இமாம். இவரின் முன்னோர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆசிரியராக இருந்தவர். இவர் தந்தை பாட்னா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர். தன் முதல் மகன் சையது மேதி இமாமை உயர்கல்வி கற்க ஹாரோ மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி அவரை லத்தீன், கிரேக்கப் புலவராக படிப்பித்தவர். ஹஸன் மனித உரிமை ஆர்வலரான பிரிட்டிஷ் பெண்மணி பல்லுவை மணந்தார். இவருடன் பாரிஸ்டராக படித்தவர்கள் சித்ரஞ்சன் தாஸ், எச்.டி.போஸ் போன்றோர். இவர்களில் ஹஸன் சிறந்த பாரிஸ்டராக விளங்கினார். இவரைச் சுற்றியிருந்த இவரது உறவினர்கள் அனைவரும் பாரிஸ்டர்கள். சர். சுல்தான் அகமது, சயதுஅப்துல் அஜீஸ், இவரின் மைத்துனர் சையது ஜாபர் இமாம், இவர் ஜின்னாவின் மருமகனாக விளங்கியதுடன் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
தாதாபாய் நவ்ரோஜியால் அரசியலுக்கு கவரப்பட்டார். 1892 இல் கல்கத்தாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். 1916 இல் அன்றைய அரசியல் காரணங்களுகாக தன் நீதிபதி பொறுப்பைத் துறந்தார். 1921 இல் மாகாண சட்டமன்றத்திற்கு தேர்வாகினார். இவர்தான் தன் நுட்பமான புரிந்துணர்வால் மாண்டேரு செம்ஸ் போர்டின் சீர்திருத்த அறிக்கையின் தீமைகளைக் கண்டு அகில இந்திய அளவில் கிளர்ச்சி தோன்ற காரணமானவர். பீகாரில் மாணவர்களைத் திரட்டி மாநாடு நடத்தினார். இதனால் இந்திய அரசியலில் புகழ்மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.
பம்பாய் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான தீர்மானத்தை த வாதத் திறமையால் எதிர்த்தார். அவரின் அரசியல் பார்வை கிலாஃபத் இயக்கத்தின் பால் திரும்பியது. இதனால் சட்ட மறுப்பு இயக்கத்தை முன் நின்று நடத்தினார். சுதேசி இயக்கத்தை பீகாரில் தொடங்கி அதன் மூலம் முதன் முதலாக அன்னியப் பொருட்களை துறக்க அறைகூவல் விடுத்தார். கதரை பயன்படுத்த தூண்டியதுடன் தொடர் பரப்புரைகளும் மேற்கொண்டார். பீகாரில் சைமன் குழுவுக்கு எதிரான இவரது போராட்டத்தைக் கண்டு பிரிட்டிஷார் அலறினர்.Dadabhai-Naoroji-008
சிறந்த வழக்கறிஞரான இவர் தன் தலைமைத்துவ பண்பு நலன்களால் மகளிர் கல்விக்காக அறக்கட்டளையை உருவாக்கி கல்வி வழங்கினார். ஆங்கிலப் பேரரசு ஆட்சிக் காலத்தில் இந்திய நாட்டின் பொருளாதார சுரண்டலையும் அதனால் ஏற்பட்ட வறுமையையும் அவர் எதிர்த்துப் போராடினார். பீகாரிகளை ஒன்றிணைக்கும் சங்கத்தின் தலைவராகவும், ஆங்கில நாளிதழின் நிர்வாகியாகவும் விளங்கி பிறர் சமூக அக்கறை கொள்ள தூண்டுகோலாக விளங்கினார்.
1918 இல் சையது உசேன் இமாம் தலைமையில் நடந்த பம்பாய் மாகாண கூட்டமும் அதில் அவர் ஆற்றிய உரையும் பல முன்னணி தேசத் தலைவர்களை அடையாளம் கண்ட நிகழ்வாக இந்திய அரசியல் வரலாற்றில் விளங்குகிறது.mappila-revolt-malabar-rebellion-4-638