சட்டம் பயின்று சாதனை படைத்தோர்

ambedkar-jayanti-Photos-2015
முதன் முதலாக தன் ஆட்சிப் பகுதியில் உலகில் வெறெங்கும் இல்லாத நெறிகளை உள்ளடக்கி ஒரு அரசின் சாசனச் சட்டத்தை உருவாக்கியவர் திருநபி ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம் அவர்கள்.
அதனால்தான் சூரியன் மறையாத தேசம் என்று மார்தட்டிக் கொண்ட நாட்டிலிருந்து முகலாயர்களுக்குப் பின் நாட்டை ஆண்ட

வெள்ளையர்களின் சட்ட ஆலோசகரும் அன்றைய அரசின் சட்டத்துறை செயலாளராக பொறுப்பு வகித்த “லார்ட் மெக்காலே” கிழக்கிந்திய கம்பெனிக்காக சட்டம் வரைகையில் உலகில் ஒளி பொருந்திய சாசன சட்டத்தை இயற்றிய அரபு தேசத்தின் தலைவர் திரு நபிக்குப் பின்னர் ஒரு சாம்ராஜ்ஜியத்திற்காக என்னளவில் உன்னத சட்டத் தொகுப்பைத் தந்துள்ளேன். இந்திய சட்டத்தை வரைவதற்காக நான் உலகின் மகிமை பொருந்திய கிரேக்கச் சட்டங்கள், சாக்சானிய சட்டம், ரோம் சட்டம், இலத்தீன் சட்டங்கள், இந்திய வேதம், பழங்கால இலக்கியங்கள் பலவற்றை பார்வையிட்டேன்.
சவூதி தேசத்திலும் சில காலம் தங்கி அரபி கற்றேன். மொழி மாற்ற நூல்களை விட அரபி நூல்களை அம்மொழியிலேயே கற்பதற்காக அரபி கற்று மூல நூல்களைக் கற்றேன். அவற்றில் உலகிற்கு ஒளியூட்டும் சட்டங்கள் விதிகள் நெறிகள் அறங்கள் பலவற்றையும் நான் உள் வாங்கிய பின்னரே இந்திய சட்டங்களை உருவாக்கியதாக மெக்காலே குறித்து சிலாகிப்பார்கள். லார்ட் மெக்காலே தன் பணி முடித்து நாடு திரும்பியதும் சவூதியில் சில காலம் வாழ்ந்து இஸ்லாத்தைத் தழுவி உயிர் விட்டார் என்ற செவி வழி செய்தி உண்டு. என்று அவர் அந்நாளில் எழுதிய குறிப்புகளில் காணப்பட்டதாக என் ஆசிரியர் அமரர் ஹபீப் அப்பா என்னிடம் தெரிவித்ததை தற்போது பகிர்கிறேன்.
எனினும் தக்க சான்று இல்லை. ஆயினும் அரபு சட்டங்கள் அதனை இலக்கியமாக நேசிப்பவருக்கு தேனடை.
அதனால்தான் புகழ் பெற்ற மௌலவிகள் அரபு கிதாபுகளில், இலக்கியங்களில் மூழ்கி தேனில் விழுந்த ஈக்களாக மாறுவதைப் பார்க்கிறோம்.
மாக்கியவல்லி, மெகஸ்தனிஸ், சாண்டில்யர் எனப் பலருடன் அரசியல், தத்துவம், ஜனநாயகம் குறித்து சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில் போன்றோரும் சில கருத்தை ஆழமாக விதைத்தனர். இவற்றை எல்லாம் கற்றதுடன் நம் நாட்டு புராதன இலக்கியங்களில் உள்ள நீதி நெறிகளையும் உள்ளடக்கி நாடு விடுதலை பெற்ற பின்னர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் தலைமையில் அறுவர் குழு நம் அரசியல் சாசன சட்டத்தை இயற்றியது. இந்த சாசனம் நூலாகும் போது இதன் அட்டைப் படத்தை வடிவமைத்தது தாகூர் நிறுவிய சாந்தினிகேதன் ஓவியக் கல்லூரி முதல்வரும் அவர்தம் சீடருமாவார். நான்கு முக சிங்கத்தை வரைய அந்த இளம் ஓவியருக்கு 21 நாள் பிடித்தது. 20 நாட்கள் காட்டிற்கு ச் சென்று சிங்கத்தின் அழகை, கம்பீரத்தை அவர் தனது மனத்திரையில் பதித்து அதனை தாளில் வரைந்தார். இவ்வாறு அந்த இளைஞர் பத்து சிங்கம் படம் வரைந்து வரைந்து அதில் திருப்தி இல்லாத சாந்தினிகேதான் முதல்வர் அந்த இளைஞரின் பதினோராவது நான்குமுக சிங்க ஓவியத்தை (Sketch) தங்க வண்ணத்தால் குழைத்து ஓவியம் தீட்டி சாசன நூலின் நான்கு புறத்திலும் ஆல், அரசு, வேம்பு இலை மலர்க் கொடிகளை அலங்கரித்து அட்டையைத் தயாரித்தார். இன்றும் 21 வது நாளில் இளம் ஓவியர் வரைந்த அந்த சின்னம்தான் நம் அரசு சின்னமாக உள்ளது.
பெருமானாரின் சாசனம் எழுதப்பட்ட பின்னர் அதில் தன் மோதிர முத்திரையைப் பதித்து ஓர் ஆட்டுத் தோலால் செய்த உறையிலிட்டு முதன் முதலாக அபிஸீனிய மன்னருக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறுதான் உலகில் முதல் அரசியல் சாசன சட்டம் உருவாகியது.