மௌலவி சர் ரஃபீயுத்தீன் அகமது.

rafiyudeen ahmad
பாரிஸ்டர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி எனப் பல பரிமாணம் கொண்டவர். மௌலவி என அழைக்கப்பட்ட ரஃபீயுத்தீன் அகமது மௌலவியாகவே மார்க்கப் பணிகளில் ஊடாக புனா டெக்கான் கல்லூரியில் இளங்கலைப் பெற்ற பின் இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து பாரிஸ்டர் சட்டம் பயின்றார்.
இவருடைய நண்பர் முன்ஷி என்கிற

அப்துல் கரீம், இவர் விக்டோரியாவின் இந்திய செயலாளர். ஆட்டோமன் அரசுடன் விக்டோரியா மகாராணியின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர். பின்னாளில் பிரிட்டிஷ் தூதராக கான்ஸ்டாண்டின் நோபளில் பணி புரிந்தார்.
மாண்டேகு செம்ஸ் போர்டு தூதுக் குழுவில் தேச பக்தியுள்ள முஸ்லிம் பிரதிநிதியாக இடம் பெற்றவர். பம்பாய் மாகாண சுயாட்சியில் இவர் கவுன்சில் உறுப்பினராகி தேர்வாகி வேளாண்மை கல்வித்துறை அமைச்சராகவும் சேவை புரிந்தார். புகழ்மிக்க இந்திய பாரிஸ்டர்களில் மௌலவி ரஃபியுத்தீன் அகமது புகழ்பெற்றவராக விளங்கியவர்.