மானுடவியல்

மனித சமுதாயத்தின் கடந்த கால மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், உயிரியல் மற்றும் சமூக அறிவியலின் துணைகொண்டு படித்தறிந்து ஆய்வு செய்ய உதவும் துறையே மானுடவியல் (Anthropology). எதிர்கால வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் கடந்த கால வாழ்க்கைமுறையும், நாகரிகமும்தான் அடித்தளம். 150 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் துறை மானுடவியல் என்று கூறலாம். மனிதனின் அனைத்து விதமான பண்புக் கூறுகளையும் படிக்கிற துறை மானுடவியல் என வரையறை செய்துள்ளனர்.
ஐரோப்பியர்கள் மானுட-வியல் துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே, மானுடவியல் அணுகுமுறையை தங்களின் வர்த்தகத்-திற்கும், காலனி ஆதிக்க செயல்பாட்-டிற்கும் பயன்படுத்திக் கொண்டனர். அநேகமாக ஐரோப்பியர்கள் தங்களின் காலனியாதிக்க நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளே, மானுடவியல் துறை குறித்த அறிவை வெளிப்படுத்தி-யதைப் பார்க்க முடியும். ஐரோப்பியர்கள் மேற்கொண்ட இத்தகைய சமூக ஆய்வுகள், 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை அடைய அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்.
மானுடவியல் என்பது தான் என்ன ? மனிதர்களை படிப்பது. இது மனிதக் குழுவை ஆராய்வது. மானுடவியலாளர்கள் மனிதர்களை ஆராய்வதற்கு பலவிதங்களில் முயல்கிறார்கள். மதம், இனம்,மொழி,சாதி சார்ந்து ‘அன்னியர்களை’ கட்டமைப்பதும் அவர்களின் சதியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று வரலாறுகளை உருவாக்குவதும்தான் வரலாற்றில் பேரழிவுகளை உருவாக்குகிறது. அறிவுஜீவி என்பவன் அவற்றுக்கு எதிரானவனாகவே எப்போதும் இருப்பான். அந்த நுண்ணிய தளங்களை அறுவை சிகிழ்ச்சைக் கத்தியின் துல்லியத்துடன் பிரித்து ஆராய நம்மிடம் உண்மையான பண்பாட்டு மானுடவியலாளர்கள் வளர வேண்டும்.
உலகெங்கும் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், மரியாதையையும், புகழையும் பெற்றுத்தரும் இப்படிப்பை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப் படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள், இத்துறையின் முன்னோடிகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.‘‘மனித சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், பல்வேறு நாடுகளிலுள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடை, அவர்களுக்கு ஏற்படும் நோய்கள்
மற்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் மானுடவியல் ஆராய்கின்றது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் மனிதனில் காலப்போக்கில் ஏற்படக்கூடிய உடல், மனம், உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் பற்றி படித்தறிய உதவுவதால் மிகவும் இன்றியமையாத துறையாக உலகம் முழுவதும் இத்துறை கருதப்படுகிறது. மானுடவியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்Social Anthropology சமூக மானுடவியல்
Biological Anthropology உயிரி மானுடவியல்
Cultural Anthropology பண்பாட்டு மானுடவியல்
Archaeology தொல்லியல்
Anthropologic Lingusitcs மானுட மொழியியல்
Cognitive Science அறிவுசார்ந்த அறிவியல்
Global Studies உலகியல்
Sociology சமூகவியல்
Socio Linguistics சமூக மொழியியல்
Socio Movements சமூக நடத்தைகள் இப்பிரிவுகளில் படிக்கலாம் B.A., B.Sc., B.S., M.A., M.Sc., M.S., M.Phil., Ph.D.,D.Phil., Diploma இளங்கலையைப் பொறுத்தவரை மானுடவியலில் சிறப்புத்துறைகள் குறைவு. முதுகலையில் குறிப்பிட்ட சிறப்புப் பிரிவைத் தேர்வு செய்து படிக்கலாம்.இந்தியாவில் சிறந்த மானுடவியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில... சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி
பெங்களூர் பல்கலைக்கழகம், பெங்களூரு
ஆந்திர பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, புதுடெல்லி
சாவித்ரிபாய் பூலே புனே யுனிவர்சிட்டி, புனே
பஞ்சாப் யுனிவர்சிட்டி, சண்டிகர்
யுனிவர்சிட்டி ஆஃப் கல்கத்தா, கொல்கத்தா
கவுகாத்தி யுனிவர்சிட்டி, அசாம்
லக்னோ யுனிவர்சிட்டி, லக்னோ