வேளாண் படிப்புகள்

மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக வேளாண்மை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 சதவீத விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், விளைநிலம் பற்றாகுறை போன்ற காரணங்களால் விளைபொருட்களின் தேவை அதிகரித்தே வருகிறது. ‘விவசாயத்திற்கெல்லாம் எதிர்காலம் இல்லை...’ என்று பொதுவில் பேசப்பட்டாலும், இன்றளவும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நிற்பது விவசாயம் தான். விவசாயமும், அது சார்ந்த தொழில்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 18 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. உணவுக்கான தேவை எந்தக் காலத்திலும் குறையப் போவதில்லை.
தமிழகத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 4, மதுரையில் 2, திருச்சியில் 3, கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையத்தில் தலா ஒன்று என மொத்தம் 12 வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர, தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் 4 உள்ளன. வேளாண்மை பட்டப் படிப்பில் பி.எஸ்சி.யில் 6, பி.டெக்.கில் 7 பாடப் பிரிவுகள் என 13 பாடப் பிரிவுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம்தான். கவுன்சலிங் மூலம் தகுதியான பாடப் பிரிவு கிடைக்கும்.
1. அரசு கல்லூரிகளில் வேளாண்மை பொறியியல் - பி.டெக்., அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி - பி.டெக்., வேளாண்மை - மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ., அக்ரிகல்சர் டெக்னாலஜி - பி.டெக்., பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, பி.டெக்., தோட்டக்கலை, பி.டெக்., வேளாண் பொறியியல், பி.எஸ்சி. உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல், பி.டெக்., சுற்றுச்சூழல் எஞ்சினியரிங், பி.எஸ்சி.வனவியல், பி.எஸ்சி. உணவு அறிவியல் மற்றும் சத்துணவியல், பி.எஸ்சி. பட்டுப்புழுவியல், பி.டெக். பயோ டெக்னாலஜி, பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ், பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்., விவசாய மேலாண்மை., வேளாண்மை - பி.அக்ரி., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து இளநிலைப் பட்டப் படிப்புகளும் 4 ஆண்டு கால படிப்புகளாகும். +2ல் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் பி.எஸ்சி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.டெக்கிற்கு கணிதமும், கம்ப்யூட்டரும் எடுத்துப் படித்திருக்க வேண்டும். வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு குறைந்த இடங்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.
வேளாண் படிப்பில் தேறியவர்கள் வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானியாகலாம்.
மத்திய, மாநில வனத்துறை, மற்றும் அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. தனியார் நிறுவனங்களிலும் வேலைகள் காத்திருக்கின்றன. மக்கள் ஆரோக்கியமான உணவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால், இந்தப் படிப்புக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பி.எஸ்சி அக்ரி படித்த பெரும்பாலான மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் விதமாக பி.எஸ்சி. அக்ரி படிக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணியில் இருக்கிறார்கள்.
பி.எஸ்சி. தோட்டக்கலை படித்தவர்கள் சிவில்சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆகலாம். மாவட்டத் தோட்டக்கலைத் துறை, கல்லூரிகளிலும் பணியில் சேரலாம்.

agriculture1
பி.எஸ்சி வனம் இப்படிப்பை முடித்தவர்களால் யு.பி.எஸ்.சி நடத்தும் ஐ.எஃப்.எஸ் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறமுடியும். ஏனெனில், ஐ.எஃப்.எஸ் படிப்புக்கான பாடத்திட்டமும் பி.எஸ்சி வனம் படிப்பின் பாடத்திட்டமும் ஒரே மாதிரியானவை.
இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக் கழகங்கள் மாற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்.
* இந்தியன் அக்ரிகல்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடில்லி
வேளாண் தொடர்பான படிப்புகளில் முன்னணியில் இருக்கும் இக்கல்வி நிறுவனத்தில், எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iari.res.in
* வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், கர்நாடகா
1968ம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டு முதுநிலை வேளாண் பொருளாதாரம் என்ற படிப்பை நிறுவனம் வழங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பில் வேளாண் தொடர்பான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு http://uasbangalore.edu.in/
* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை
வேளாண் ஆய்வுகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் இப்பல்கலைக்கழகம், இளநிலையில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. முதுநிலை மற்றும் பிஎச்.டி.,பிரிவுகளிலும் வேளாண் தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. விவரங்களுக்கு இப்படிப்புகளில் சேர்வதற்கான கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை http://www.tnau.ac.in, என்ற இணையதள முகவரியிலோ, 0422&6611210, 6611200 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.
* அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் இங்கு எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் வேளாண் பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ., அக்ரி பிசினஸ் படிப்புகள் உள்ளன. விவரங்களுக்கு, www.annamalaiuniversity.ac.in
* பிர்சா வேளாண் பல்கலைக்கழகம், ஜார்கண்ட்
முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள் இங்கு உள்ளன. மெரிட் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு hzzp://www.baujharkhand.org/