காற்றாலை மின்சாரம்

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது பழையமொழி நவீன உலகின் புதிய மொழி “கற்றுள்ள போது கரண்ட் எடுத்துக் கொள்” என்பதே! தமிழகத்தில் இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்சனை மின்தடை அதற்கு தீர்வு காற்றிலும் இருக்கிறது.
காற்றாலை (Wind mill) என்பது, காற்றால் உந்தப்படும், இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன.
காற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் முதலில் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புருஸால் 1888 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200கிலோவாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிகளைக் கொண்ட காற்றுச்சுழலி யொகனீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட்டது. காற்றுச்சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை பல நூற்றாண்டுகளாக விருத்தியடைந்து வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் காற்று மின்சார உற்பத்தி உலகம் முழுதும் வளர்ச்சியடைந்து வருகிறது.
2011 ஆம் ஆண்டளவில் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், ஜி.பி.ஆர்.எஸ். மீட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உரிய திட்டமிடலுடன் காற்றாலை மின்சாரம் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
பிரிட்டன் மட்டுமின்றி ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் 2020-க்குள் தமது பசுமை இலக்கை அடைய மறுசுழற்சி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை திறந்து வருகின்றன.
காற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. அத்துடன், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளுக்கு செலவு செய்வது போன்று இந்த மின்சக்திக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு 1980களில் ஏற்படத் தொடங்கியது.
பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும்,இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
காற்றாலைகள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலுமே அமைக்கப்படுகின்றன. நகரங்களில் வானுயர கட்டடங்கள் இருப்பதால் காற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. அதனால் காற்றாலை மின் உற்பத்திக்கு கிராமப் பகுதிகளே உகந்த இடமாக தேர்வு செய்யப்படுகிறது.
காற்றாலை மின்சாரத்தை இன்னும் எளிமைப்படுத்தி சிறிய இடத்திலும் வைத்து அனைவரும் மின்சாரம் பெறும் வகையில் அமைக்கப்பட்டு அரசுகளும் அதற்கு உதவுமானால் அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள்.
நிலக்கரி, அணு மின் நிலையம் போன்ற ஆபத்துகளில் இருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.
Renewable Energy Sources குறித்த பயிற்சி மற்றும் Wind Energy என்ற பாடம் நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத் தரப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சென்னையிலும் படிக்கலாம்.
முகவரி : National Institute of Wind Energy No.30, Velachery - Tambaram Main Road, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100 Tel: 044 2246 3984 www.niwe.res.in <http://www.niwe.res.in>
Chennai
National Institute of Wind Energy (NIWE)
Velachery - Tambaram Main Road, Pallikaranai, Chennai - 600 100
Phone: +91 - 44 - 2246 3982/ 2246 3983 / 2246 3984 / 2900 1162 / 2900 1167 / 2900 1195
Kayathar
Wind Turbine Test Station (WTTS) & Wind Turbine Research Station (WTRS)
TNEB Wind Farm, Ayynaryuthu - Sub Station Kayathar Devarkulam Road Koilpatti Taluk, Kayathar - 628 952 Phone : +91 - 4632 - 261751/ 261752 / 261931 E-mail : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.