இஸ்லாமிய வங்கி இயல்

அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான். ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள்.
இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?
சாதாரண பெட்டிக் கடை முதல் பெரும் ஷாப்பிங் மால் வரை வைப்பதுபோல் வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. ஆனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக நேர்மையாக, யாரையும் துன்புறுத்தாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வதுதான் இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமூகவியல் அது.
வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).
ஐரோப்பிய வங்கிகள் அண்மைக் காலத்தில் உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோது, உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது இஸ்லாமிய வங்கியியல்.
மலேசியாவில், ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில்
நூற்றுக்கணக்கான இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் சொல்வது போல் : ''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். ஐ.எம்.ஃபும்., உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பும் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன.”
இந்தியாவிலும் இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியுள்ளது. UAE யில் அபாரமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியியல் துறையில் மேலும் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளன. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல ஆயிரம் இஸ்லாமிய வங்கியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.
நமது பிள்ளைகளை B.Com | BA Economics | BBA | போன்ற படிப்புகளில் நமது கல்லூரிகளில் சேர்த்து இளங்கலை ( UG ) மொழி பாடத்தில் இரண்டாவது மொழியாக அரபியை தேர்வு செய்ய வேண்டும். மேற்படிப்பில் (PG இஸ்லாமிய வங்கியியல் குறித்து Malaysia, UAE, Bahrain, Jordan, UK போன்ற நாடுகளில் படிப்பது உலகளாவிய வாய்ப்புகளை பெற்றுத் தரும்.
கேரளாவில் இஸ்லாமிய வங்கியியல் பட்டப்படிப்பு சில இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.