இஸ்லாமிய உளவியல் படிப்பு

உளவியல் என்ற இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பாகும். மனிதனை இயக்குவது அவனது உள்ளம்தான். இஸ்லாம் இதை “நஃப்ஸ்” என்று கூறுகின்றது.
மனிதர்களின் உள்ளங்கள் சீராக, அமைதியாக, ஆன்மீகமாக, இருந்தால் இந்த உலகமே அமைதிப் பூங்காவாக மாறிவிடும், அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள்.
“உடலில் ஒருபாகம் உள்ளது, அந்த பாகம் சீராக இருந்தால் ழுமு உடலும் சீராகும், அந்த பாகம் சீர்குலைந்தால், முழு உடலும் சீர்குலைந்துவிடும்” என்றார்கள். அது எந்த பாகம் என்று தோழர்கள் கேட்டனர். “மனிதனது உள்ளம்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி, முஸ்லிம்)
அவசரமும், பரபரப்பும் நிறைந்த இன்றைய மக்களின் வாழ்க்கை முறை, குறுக்கு வழியில் பொருளைத் தேடுவதும் சொகுசு வாழ்க்கையுமே வாழ்விற்கான இலக்கு என்ற வெறியும் சேர்ந்து மக்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியதால் இளம் வயதிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவருகின்றனர். இதனால் குடும்ப வாழ்வில் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மீள வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெருக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும் மக்களுக்கு PSYCHOLOGY படித்த சிறந்த உளவியல் ஆலோசகர் மூலம் சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்த முடியும்.
அதிலும் இன்றைய உளவியல் PSYCHOLOGY பாடம் மேற்கத்திய சிந்தனை ரீதியிலான கருத்துக்களை தீர்வாகக் கொண்டது. இதோடு இஸ்லாமிய உளவியல் (ISLAMIC PSYCHOLOGY) பாடத்தையும் சேர்த்து படித்தால் மனிதனின் உள்ளம் தொடர்பான சிக்கலுக்கு சரியான தீர்வு அளிக்க முடியும்.
அழகப்பா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியாக வழங்கும் B.Sc. PSYCHOLOGY என்ற உளவியல் பாடத்தோடு இஸ்லாமிய உளவியல் பாடத்தையும் சேர்த்து படிப்பதற்கு அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியில் B.I.S.Ed PSYCHOLOGY என்ற படிப்பு பறிற்றுவிக்கப்படுகிறது.www.annaikhadeeja.in
பெண் கல்வியாளர்களை உருவாக்கும் B.I.S.Ed.,
இத்தோடு சேர்த்து தமிழக முஸ்லிம்களின் இன்றைய தவறான கல்வி முறையை மாற்றி அமைத்திட தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் இன்றையத் தேவை. இந்த பள்ளிக்கூடங்களை உருவாக்குவதற்கும் நடத்துவதற்கும் இஸ்லாமியக்கல்வியும் பல்கலை பட்டப்படிப்பும் ஒருசேர பயின்ற ஆயிரக்கணக்கான ஆசிரியைகள் மற்றும் பெண் கல்வியாளர்கள் உருவாக்கப்படவேண்டும்.
சமுதாயத்தின் இந்த அவசியத் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட படிப்பு தான் B.I.S.Ed., என்ற இளங்கலை பட்டப்படிப்பு.
மாணவிகளுக்கு ஒரு இஸ்லாமிய நர்சரி பள்ளியை உருவாக்கி சிறப்பாக நடத்திடும் பயிற்சியை கொடுக்கும் படிப்பு தான் இந்த B.I.S.Ed., படிப்பு.
சகோதரர்களே உங்கள் வீட்டுப் பெண்களையும் இந்த படிப்பை படிக்க வைத்து உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய பள்ளிக்கூடத்தை உருவாக்கிடுங்கள்.அது நாளைய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு விதையாக அமையும்.
ANNAI KHADEEJA ARTS & SCIENCE COLLEGE FOR WOMEN
AMMAPATTINAM. www.annaikhadeeja.in