தத்துவயியல்

புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை என்பார்கள். அதை புரிந்து கொள்ளும் முயற்சியில் மனிதனின் மொழி, மனம், இயற்கை, சமுதாயம், சிந்தனை, ஞானம், முதலான மன நலன்களைப் பற்றிய அடிப்படை, பொதுவான நெறிமுறைகள், மனித இனத் தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் படிப்பே தத்துவயியல். வாழ்க்கை, உலகம், இயற்கை ஆகிய மூன்றினையும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளையும் ஆராய்வதுதான் தத்துவயியல்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பிற்கு தத்துவயியலும் ஒரு பாடமாக எடுக்கப்படுகிறது. எளிதாக தொடக்கநிலையில் தேர்வு பெற நிறைய மாணவர்கள் தத்துவயியலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மேலும் இக்கல்வி முறை மாணவர்களுக்கு உலகளாவிய பார்வை, விமர்சனம் போன்ற ஆய்வுகளின் மூலம் உண்மை அல்லது யதார்த்த நிலை எவை, பொய்மை அல்லது மாயை எவையென இனங்கண்டு கொள்ள பயிற்றுவிக்கிறது. தத்துவ இயலே எல்லா கொள்கைகளுக்கும் மூலமாக இருக்கிறது.
காலம்: 3 ஆண்டுகள்
வேலை வாய்ப்புகள் : பொது நலத்துறை, விளம்பரம், மற்றும் வணிக குழுமங்களில் பரவலான வேலை வாய்ப்பு. கல்லூரியில் விரிவுரையாளராகவும், பள்ளிகளில் ஆசிரியராகவும், இக்கல்வியில் மேனிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பதவி பெற வாய்ப்பு உள்ளது.