கற்றலில் குறைபாடு முதுநிலை பட்டயப் படிப்பு!

கற்றலில் குறைபாடு குறித்த ஓராண்டு பட்டயப் படிப்புக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று 'கேர்' அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்துடன் ஓராண்டு POSTGRADUATE DIPLOMA COURSE IN LEARNING DISABILITIES படிப்பு நடத்தப்படுகிறது.

இந்தப்படிப்பில் மொத்த இடங்கள் 40 ஆகும். 45 வயதுக்கு கீழே உள்ள பெற்றோர், ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் - சட்டப்படிப்பு - சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

விண்ணப்பத்தை www.care.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 2-வது வாரத்துக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 28212828 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.