ஆற்றலை மேம்படுத்தும் கலைப்பிரிவு படிப்புகள்

வரலாறு

வரலாறு இளங்கலைப் பட்டப் படிப்பு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் முன்பு கற்றுத் தரப்பட்டது. ஆனால் தற்போது அரசு கலை கல்லூரிகள் தவிர்த்து தனியார் கல்லூரிகள் ஒரு சிலவற்றில்தான் வரலாறு இளங்கலை பட்டக்கல்வி கற்பிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பட்டக்கல்வியில் தொல் கால வரலாறு, தொல் பொருட்கள்,

அகழ்வாய்வு பற்றிய பாடங்கள் சிறப்பான நிலையில் கற்பிக்கப்படும். பொதுவாக வரலாறு என்பது ஒவ்வொரு சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு அடிப்படையான கருவியாக இருக்கிறது. உலகில் எடுக்கப்படும் அனைத்துத் துறை சார்ந்த முடிவுகளும் வரலாற்று நிகழ்வின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது. வரலாறு என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் வாழ்ந்த விதம், அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம் போன்றவற்றின் பதிவுகள், உண்மைகள், போன்றவற்றைப் பற்றிப் படித்தலே வரலாறு. வரலாற்றைப் படிப்பதன் மூலம் நம் முன்னோர்களின் உயர்வான வாழ்க்கை நெறிகள், தத்துவங்கள், கலை, பண்பாடு போன்ற நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்வதோடு, மண்ணுக்கும், அரசாட்சிக்குமிடையில் நடந்த சண்டைகள் அனைத்தையும் பற்றிப் படிப்பதே வரலாறு. வரலாற்றுப் பாடம் எடுத்துப் படிப்பவர்கள் அதனை ஆழ்ந்து நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பி.ஏ. வரலாறு பல கலைக் கல்லூரிகளில் பாடமாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. சட்டத்துறை போன்ற தேர்வுகளில் வரலாறு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. பொதுவாக வரலாறு படித்தவர்கள் முதுநிலை வரலாறு படிக்கலாம். அதேவேளை அரசுத்துறை சார்ந்த பணியாளர் தேர்வுகளில் பிற துறை பட்டம் பெற்றவர்களை விட சிறப்பான முறையில் தேர்வில் வெற்றி பெற வரலாறு உதவும். சமூகவியல். மனிதன் எப்படி ஆதிகாலத்திலிருந்து குழுக்களாக வசிக்கத் தொடங்கினான், அவனுடைய சமுதாயத்தின் நிலை, குடும்பம், உறவுகள், திருமணம் மற்றும் சடங்கு முறைகள், இனம், மொழி, மக்களின் தலைவன், அரசன், ஆட்சி முறை போன்ற பலவற்றைப் பற்றிப் படிப்பதே சமூகவியல் ஆகும். இந்திய அரசுத் துறை சார்ந்த பணிகளுக்கு முயற்சிப்போருக்கு இந்திய சமூகவியல் குறித்து ஆழமான புலமை இருப்பது அவசியம். சமூகவியல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்விற்கு முயற்சிப்போர் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்ற பாடமாகும். 'பிரிலிமினரி' என்று சொல்லப்படும் முதல் நிலைத் தேர்வுகளுக்கு சமூகவியல் பெரும்பாலான மாணவர்களால் விரும்பி எடுக்கப்படுகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் பி.ஏ. சமூகவியல் கற்பிக்கப்படுகிறது. வரலாற்றுப் பாடத்தைப் போலவே சமூகவியல் பட்டக் கல்வியும் பல கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. +2 வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்துத் தேறினாலும் சமூகவியலைப் படிக்கலாம். சமூகவியலும் வரலாற்றைப் போலவே அரசுத்துறை தேர்வு எதுவானாலும் வெற்றி பெற உதவும். பெண்களுக்கு ஏற்ற துறை இது. சட்டக்கல்வி படிக்க சமூகவியல் இளங்கலை பட்டம் பேருதவி புரியும். பிற துறை படித்தவர்கள் ஒரு பிரச்சனையை அணுகுவதற்கும், சமூகவியலைப் படித்தவர்கள் அணுகுவதற்கும் வேறுபாடு உண்டு. அரசின் பெரிய பொறுப்பில் உள்ளோர் பெரும்பாலும் சமூகவியலைப் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தத்துவவியல் உலகில் தோன்றிய அறிஞர்களின் தத்துவங்கள் மற்றும் கொள்கைகள், தனித் தனி இயல்களாகப் பிரிக்கப் பட்டு ஆராய்ச்சி நோக்கோடு கற்றுத்தரப்படுகின்றன. தத்துவங்களின் அடிப்படை உண்மைகள் என்ன? அவை இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் எவ்வாறு பொருத்தமாக இருக்கின்றன என்பது போன்ற நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பிற்கு தத்துவவியலும் ஒரு பாடமாக எடுக்கப்படுகிறது. தேடல் நிறைந்த மக்கள், மாணவர்கள் இந்த தத்துவத் துறையை தேர்வு செய்யலாம். நாளை புதிய தத்துவவாதியாக உருவாவதற்கு வழி ஏற்படும். உயர்நிலைத் தேர்வுகளில் எளிதாக தொடக்கநிலையில் தேர்வு பெற நிறைய மாணவர்கள் தத்துவவியலைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படிப்பு பல பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகிறது. பொதுவில் தத்துவயியலை பார்ப்பவர்களுக்கு அது ஒரு வாய்ப்பற்ற துறை போல தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அரசு அல்லது நிறுவனம் என்றால் அவைகளுக்கென்று ஒரு கோட்பாடு, கொள்கை உண்டு. அது போன்ற அடிப்படைகளை இது போன்ற தத்துவயியலை படித்தவர்கள்தான் உருவாக்குகின்றனர். அதைப் போலவே உளவு நிறுவனப் பணிகளில் நாட்டுக்கு நாடு வளர்ந்து வரும் புதிய புதிய இயக்கங்கள் பற்றி புலனாய்வு செய்யவும், அறிக்கை தயாரிக்கவும் தத்துவயியல் பயின்றவர்களால் எளிதாக இயலும் என்பதால் இதனைப் படிப்பவர்களுக்கு பல வாய்ப்புகள் உண்டு. மேல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தத்துவவியலாளர்களுக்கு தனிச்சிறப்பு தருகின்றனர். அரசியல் அறிவியல். பழங்காலத்திலிருந்து அரசியல் எந்தெந்த முறையில் வளர்ந்து வந்திருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் எவ்விதங்களில் உள்ளது, இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள், அரசியல் ஆட்சியாளர்களின் சக்தி என்ன, கடமைகள், உரிமைகள் என்ன? என்று அரசியலைப்பற்றி ஆழ்ந்து படிப்பதே அரசியல் அறிவியல் ஆகும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு அரசியல் அறிவியல் ஆகும். இது அவர்களுக்குத் தொடக்க நிலைத்தேர்வில் மிகவும் உதவுவதோடு, ஐ,ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் படித்தவுடன், ஆட்சிப் பணியில் நன்றாகச் செயல்படவும் இது உறுதுணையாக இருக்கிறது. கலைக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. மற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலை, முதுநிலை பட்டக் கல்வியாகப் பயிலலாம். மானுடவியல் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமூகவியல், பொருளியல் என குறிப்பிட்ட படிப்புகளை மட்டும் முதுகலையில் மாணவர்கள் தேந்தெடுத்து படிக்கின்றனர். இது தவிர இன்னும் பெரும்பாலான படிப்புகள் இருந்தும் தங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்புவது இல்லை. அவற்றில் ஒன்றான மானுடவியல் இன்றும் மாணவர்களால் அறியப்படாத துறையாக இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் படிப்பு மானுடவியல். இங்குள்ள மாணவர்களுக்கு இப்படிப்பு இருப்பதே தெரியவில்லை. மனிதர்களைப் பற்றி படிப்பது : தொடக்க காலத்திலிருந்து இன்று வரையுள்ள மனிதனின் உருவத்தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வாழ்க்கை, நாகரீகம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிவியல் முறையில் படிப்பது மானுடவியல். இப்படிப்பு தமிழகத்தில் சென்னை பல்கலைகழகத்தில் மட்டுமே உள்ளது. இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு திட்டம், பழங்குடி ஆய்வு மையம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, இந்திய மானுடவியல் ஆய்வு மையம், சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மனிதவள அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு செல்கின்றனர். இவ்வளவு வேலை வாய்ப்புகள் இருந்தும் இப்படிப்பை தமிழகத்தில் பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். கடந்தாண்டில் அறுபது இடங்களுக்கு ஏழு பேர் மட்டுமே சேர்ந்தனர். இந்தாண்டும் பத்து பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலைக்கு தமிழகத்தில் எந்த ஒரு பல்கலை கழகத்திலும் மானுடவியல் படிப்பு இல்லாததை காரணமாகக் கூறலாம். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் மீதான மோகம் கூட இது போன்ற அரிய படிப்புகள் இருப்பது மாணவர்கள் மத்தியில் தெரியாமல் போவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும். இப்படிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மனித உரிமை படிப்புகள். யாருக்கு ஏற்றது? அடுத்தவர்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கம் கொள்பவரா? உரிய உரிமைகள் மறுக்கப்பட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு கொண்டவரா? பொதுச் சேவையில் நாட்டம் உள்ளவரா?பொதுச் சேவை, தொண்டு செய்வதில் நாட்டம் இருக்கிறதா? வழக்கமான வேலை வாய்ப்புகளை விடவும் வித்தியாசமானவற்றை விரும்புவீர்களா? இயக்கங்களில் ஈடுபாடு இருக்கிறதா? இந்தப்படிப்பு உங்களுக்குப் பொருந்தி வரும். பயிற்சி இணை அஞ்சல் வழியிலேயே படித்து முடிக்கலாம். இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போது உள்ள மையங்களை விடப் புதிய மையங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இயக்கங்களில் பங்கேற்கலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணி புரியலாம். சொந்தமாகவே அத்தகைய நிறுவனங்களை நடத்தலாம். இயற்கைச் சீற்றங்கள் போன்ற தற்காலிகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, உதவிப் பணிகளிலும் ஈடுபடலாம். நிறுவன ஆதரவையும் பெறலாம். பயிற்சி வகைகள் மனித உரிமைகள் பற்றிய படிப்பைப் படிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. பட்டயப் படிப்பாகப் படிக்கலாம். அஞ்சல் வழியிலும் படிக்கலாம். ஓராண்டு, இரண்டு ஆண்டு என்றும் படிக்கலாம். வளர்ச்சிக்கு வழி உங்கள் வேலை வாய்ப்பை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய துறை இது. வழக்கறிஞர் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் இதை இன்னொரு சிறப்புப் பணியாக எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள், இந்தப் பயிற்சியைப் பெறுவது, பல வழிகளிலும் உதவக்கூடும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அவசியமானது. தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. பிணக்குகளும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டு அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எங்கும் எழுகின்றன. வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் முதற்கொண்டு பெரிய பெரிய பதவிகளை வகிப்பவர்கள் வரை எல்லோருக்கும் இந்தப் பயிற்சி தேவைப்படுகிறது. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், குடியமர்வு அதிகாரிகள் போன்ற பலருக்கும் இது பற்றி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் இம்மாதிரிப் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கே நீங்கள் கற்றுத் தர வேண்டிய சூழ்நிலையும்கூட வரலாம். நீங்கள் உங்கள் கொள்கையில் காட்டும் தீவிரத்தின் மூலம் பெரும் புகழும் பெறலாம். பன்னாட்டளவிலான விருதுகள், பாராட்டுக்கள் உங்களைத் தேடி வரும். மனித உரிமைகள் பற்றிய படிப்பு விவரங்கள், குறிப்புகள், முகவரிகள் : HUMAN RIGHTS PGP in Human Rights 2 Yrs (Corresp) Any Degree Indian Institute of Human Rights Green Gate, A/15 Pariyavaran Complex Saket, Maidan Garhi, NEW DELHI - 110 030, DELHI - Ph: 6532930 6532 850 Fx: 6858609

HUMAN RIGHTS M.A. Course in Human Rights 2 Year Graduation in any stream at least 50 per cent marks, Aligarh Muslim University. ALIGARH - 202 002

HUMAN RIGHTS Post-Graduate Diploma in Human Rights and peace 1 year, HUMAN RIGHTS PG Diploma in human rights 1 Year Pondicherry University, R.Venkataraman Nagar, Kalapet, PONDICHERRY - 605 014, PONDICHERRY.

அகழ்வாராய்ச்சி. வரலாறு படித்தவர்கள், இந்தத் துறையில் விவரமாக வேலை வாய்ப்பைப் பெறலாம். இத்தனை வேலைப் பிரிவுகள் இதில் இருக்கின்றனவா என்று நீங்களே ஆச்சரியப்படலாம். அதற்கான முயற்சிகளை இப்போதே தோண்டித் துருவிப் பார்க்கத் தொடங்குங்கள். அகழ்வாராய்ச்சி என்றால் ஏதோ தோண்டிப் பார்ப்பது என்று மட்டும் சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். அப்படி அல்ல. எங்கு வேண்டுமானாலும் தோண்டிப் பார்ப்பது புத்திசாலித்தனமாகுமா? ஆகாது. ஆகவே எங்கே தோண்டவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கே பெரும் திறமை தேவைப்படும். அகழ்வுப் பணிகளை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அளவுகளைக் குறிக்க வேண்டும். அரிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கவனமுடன் கையாள வேண்டும். மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்கு அனுப்பவேண்டும். தோண்டி எடுத்ததை ஆராய வேண்டும். காலத்தை நிர்ணயிக்க வேண்டும். தோண்டி எடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். சிதைவிலிருந்து காக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்று எத்தனையோ வேலைகள் உண்டு. உங்களுக்கு வரலாறு, புவியியல், நிலவியல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கிறதா? வரலாறு படிக்கத் தொடங்கலாம். +2வுக்குப் பிறகு பட்டப் படிப்பு, இதில் தொல்லியலை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம். இந்திய வரலாறு, வெவ்வேறு காலக் கட்டங்களிலான வரலாறு போன்றவற்றையும் படிக்கலாம். அதன் பின் பட்ட மேற்படிப்பு, பட்டப் படிப்பிற்குப் பின் அல்லது பட்ட மேற்படிப்பிற்குப் பின் பட்டயப் படிப்பும் படிக்கலாம். ஆராய்ச்சிப் படிப்பிலும் சேரலாம். நீங்கள் சிறந்த தொல் பொருள் ஆய்வாளர் ஆக வேண்டுமானால் இளம் வயதிலேயே எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த ஊர் குக்கிராமமாக இருக்கலாம். அங்கு ஏதோ ஒரு மண்மேடு காணப்படலாம். குன்று என்று சொல்வார்கள். ஆனால் அது இயற்கையானதாக இருக்கத் தேவையில்லை. மூதாதையர் விட்டுச் சென்ற பொருட்கள், கட்டடங்கள் புதையுண்டு போயிருக்கலாம். கவனியுங்கள். வரலாற்றையே மாற்றி அமைக்கக் கூடிய உண்மைகளைக் கண்டறிந்து சொல்வீர்கள். நீங்கள் எத்தனையோ பாடுபடுகிறீர்கள், இது வீணாகப் போவதில்லை. வரலாற்றில் நிலைத்தவர்களின் பெயர்களை நிலைநாட்டி நீங்களும் அதில் இடம் பெறுவீர்கள்தானே? வெளிநாட்டு வாய்ப்பு வெளிநாடுகளில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பிரச்சனை வேறு! இருப்பினும் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. நீங்களே அனுமதி பெற்ற பணிகளை மேற்கொள்ளச் செல்வதாய் இருக்கலாம். அரசின் ஆணையின் பேரில் செல்வதாகவும் அமையலாம். அல்லது வேற்று நாட்டு அரசுகள் கேட்டுக் கொள்வதாலும் சென்று வரலாம். இதே துறையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அறிஞர்களின் குழுவில் நீங்களும் இடம் பெறலாம். வெளிநாட்டவர்கள் இங்கே ஆய்வு செய்ய வந்தாலும் உதவலாம். உலகமே ஒரு குடும்பம் என்பதை நடைமுறையில் அனுபவிக்கலாம். மேலும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அருங்காட்சியகம், வரலாற்றுத் துறையில் வாய்ப்புகள் உண்டு. தனித்தன்மை வரலாறு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சும்மா இருக்கும் நீங்கள் எடுக்கும் முடிவால் உங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு கிடைக்காது. உலகத்துக்கே அது உன்னதமானதாக அமையும் தொல்லியல், அகழ்வாராய்ச்சி தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள், தொடர்பு முகவரி ARCHEALOGY P.G Diploma in Archaeology, 1 Yr, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai - 625 021

வரலாறு வரலாறு இளங்கலைப் பட்டப் படிப்பு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் முன்பு கற்றுத் தரப்பட்டது. ஆனால் தற்போது அரசு கலை கல்லூரிகள் தவிர்த்து தனியார் கல்லூரிகள் ஒரு சிலவற்றில்தான் வரலாறு இளங்கலை பட்டக்கல்வி கற்பிக்கப்படுகிறது. வரலாற்றுப் பட்டக்கல்வியில் தொல் கால வரலாறு, தொல் பொருட்கள், அகழ்வாய்வு பற்றிய பாடங்கள் சிறப்பான நிலையில் கற்பிக்கப்படும். பொதுவாக வரலாறு என்பது ஒவ்வொரு சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு அடிப்படையான கருவியாக இருக்கிறது. உலகில் எடுக்கப்படும் அனைத்துத் துறை சார்ந்த முடிவுகளும் வரலாற்று நிகழ்வின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது. வரலாறு என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் வாழ்ந்த விதம், அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம் போன்றவற்றின் பதிவுகள், உண்மைகள், போன்றவற்றைப் பற்றிப் படித்தலே வரலாறு. வரலாற்றைப் படிப்பதன் மூலம் நம் முன்னோர்களின் உயர்வான வாழ்க்கை நெறிகள், தத்துவங்கள், கலை, பண்பாடு போன்ற நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்வதோடு, மண்ணுக்கும், அரசாட்சிக்குமிடையில் நடந்த சண்டைகள் அனைத்தையும் பற்றிப் படிப்பதே வரலாறு. வரலாற்றுப் பாடம் எடுத்துப் படிப்பவர்கள் அதனை ஆழ்ந்து நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பி.ஏ. வரலாறு பல கலைக் கல்லூரிகளில் பாடமாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. சட்டத்துறை போன்ற தேர்வுகளில் வரலாறு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. பொதுவாக வரலாறு படித்தவர்கள் முதுநிலை வரலாறு படிக்கலாம். அதேவேளை அரசுத்துறை சார்ந்த பணியாளர் தேர்வுகளில் பிற துறை பட்டம் பெற்றவர்களை விட சிறப்பான முறையில் தேர்வில் வெற்றி பெற வரலாறு உதவும். சமூகவியல். மனிதன் எப்படி ஆதிகாலத்திலிருந்து குழுக்களாக வசிக்கத் தொடங்கினான், அவனுடைய சமுதாயத்தின் நிலை, குடும்பம், உறவுகள், திருமணம் மற்றும் சடங்கு முறைகள், இனம், மொழி, மக்களின் தலைவன், அரசன், ஆட்சி முறை போன்ற பலவற்றைப் பற்றிப் படிப்பதே சமூகவியல் ஆகும். இந்திய அரசுத் துறை சார்ந்த பணிகளுக்கு முயற்சிப்போருக்கு இந்திய சமூகவியல் குறித்து ஆழமான புலமை இருப்பது அவசியம். சமூகவியல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்விற்கு முயற்சிப்போர் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்ற பாடமாகும். 'பிரிலிமினரி' என்று சொல்லப்படும் முதல் நிலைத் தேர்வுகளுக்கு சமூகவியல் பெரும்பாலான மாணவர்களால் விரும்பி எடுக்கப்படுகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் பி.ஏ. சமூகவியல் கற்பிக்கப்படுகிறது. வரலாற்றுப் பாடத்தைப் போலவே சமூகவியல் பட்டக் கல்வியும் பல கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. +2 வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்துத் தேறினாலும் சமூகவியலைப் படிக்கலாம். சமூகவியலும் வரலாற்றைப் போலவே அரசுத்துறை தேர்வு எதுவானாலும் வெற்றி பெற உதவும். பெண்களுக்கு ஏற்ற துறை இது. சட்டக்கல்வி படிக்க சமூகவியல் இளங்கலை பட்டம் பேருதவி புரியும். பிற துறை படித்தவர்கள் ஒரு பிரச்சனையை அணுகுவதற்கும், சமூகவியலைப் படித்தவர்கள் அணுகுவதற்கும் வேறுபாடு உண்டு. அரசின் பெரிய பொறுப்பில் உள்ளோர் பெரும்பாலும் சமூகவியலைப் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தத்துவவியல் உலகில் தோன்றிய அறிஞர்களின் தத்துவங்கள் மற்றும் கொள்கைகள், தனித் தனி இயல்களாகப் பிரிக்கப் பட்டு ஆராய்ச்சி நோக்கோடு கற்றுத்தரப்படுகின்றன. தத்துவங்களின் அடிப்படை உண்மைகள் என்ன? அவை இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் எவ்வாறு பொருத்தமாக இருக்கின்றன என்பது போன்ற நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பிற்கு தத்துவவியலும் ஒரு பாடமாக எடுக்கப்படுகிறது. தேடல் நிறைந்த மக்கள், மாணவர்கள் இந்த தத்துவத் துறையை தேர்வு செய்யலாம். நாளை புதிய தத்துவவாதியாக உருவாவதற்கு வழி ஏற்படும். உயர்நிலைத் தேர்வுகளில் எளிதாக தொடக்கநிலையில் தேர்வு பெற நிறைய மாணவர்கள் தத்துவவியலைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படிப்பு பல பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகிறது. பொதுவில் தத்துவயியலை பார்ப்பவர்களுக்கு அது ஒரு வாய்ப்பற்ற துறை போல தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அரசு அல்லது நிறுவனம் என்றால் அவைகளுக்கென்று ஒரு கோட்பாடு, கொள்கை உண்டு. அது போன்ற அடிப்படைகளை இது போன்ற தத்துவயியலை படித்தவர்கள்தான் உருவாக்குகின்றனர். அதைப் போலவே உளவு நிறுவனப் பணிகளில் நாட்டுக்கு நாடு வளர்ந்து வரும் புதிய புதிய இயக்கங்கள் பற்றி புலனாய்வு செய்யவும், அறிக்கை தயாரிக்கவும் தத்துவயியல் பயின்றவர்களால் எளிதாக இயலும் என்பதால் இதனைப் படிப்பவர்களுக்கு பல வாய்ப்புகள் உண்டு. மேல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தத்துவவியலாளர்களுக்கு தனிச்சிறப்பு தருகின்றனர். அரசியல் அறிவியல். பழங்காலத்திலிருந்து அரசியல் எந்தெந்த முறையில் வளர்ந்து வந்திருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் எவ்விதங்களில் உள்ளது, இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள், அரசியல் ஆட்சியாளர்களின் சக்தி என்ன, கடமைகள், உரிமைகள் என்ன? என்று அரசியலைப்பற்றி ஆழ்ந்து படிப்பதே அரசியல் அறிவியல் ஆகும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு அரசியல் அறிவியல் ஆகும். இது அவர்களுக்குத் தொடக்க நிலைத்தேர்வில் மிகவும் உதவுவதோடு, ஐ,ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் படித்தவுடன், ஆட்சிப் பணியில் நன்றாகச் செயல்படவும் இது உறுதுணையாக இருக்கிறது. கலைக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. மற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலை, முதுநிலை பட்டக் கல்வியாகப் பயிலலாம். மானுடவியல் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமூகவியல், பொருளியல் என குறிப்பிட்ட படிப்புகளை மட்டும் முதுகலையில் மாணவர்கள் தேந்தெடுத்து படிக்கின்றனர். இது தவிர இன்னும் பெரும்பாலான படிப்புகள் இருந்தும் தங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்புவது இல்லை. அவற்றில் ஒன்றான மானுடவியல் இன்றும் மாணவர்களால் அறியப்படாத துறையாக இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் படிப்பு மானுடவியல். இங்குள்ள மாணவர்களுக்கு இப்படிப்பு இருப்பதே தெரியவில்லை. மனிதர்களைப் பற்றி படிப்பது : தொடக்க காலத்திலிருந்து இன்று வரையுள்ள மனிதனின் உருவத்தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வாழ்க்கை, நாகரீகம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிவியல் முறையில் படிப்பது மானுடவியல். இப்படிப்பு தமிழகத்தில் சென்னை பல்கலைகழகத்தில் மட்டுமே உள்ளது. இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு திட்டம், பழங்குடி ஆய்வு மையம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, இந்திய மானுடவியல் ஆய்வு மையம், சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மனிதவள அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு செல்கின்றனர். இவ்வளவு வேலை வாய்ப்புகள் இருந்தும் இப்படிப்பை தமிழகத்தில் பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். கடந்தாண்டில் அறுபது இடங்களுக்கு ஏழு பேர் மட்டுமே சேர்ந்தனர். இந்தாண்டும் பத்து பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலைக்கு தமிழகத்தில் எந்த ஒரு பல்கலை கழகத்திலும் மானுடவியல் படிப்பு இல்லாததை காரணமாகக் கூறலாம். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் மீதான மோகம் கூட இது போன்ற அரிய படிப்புகள் இருப்பது மாணவர்கள் மத்தியில் தெரியாமல் போவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும். இப்படிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மனித உரிமை படிப்புகள். யாருக்கு ஏற்றது? அடுத்தவர்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கம் கொள்பவரா? உரிய உரிமைகள் மறுக்கப்பட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு கொண்டவரா? பொதுச் சேவையில் நாட்டம் உள்ளவரா?பொதுச் சேவை, தொண்டு செய்வதில் நாட்டம் இருக்கிறதா? வழக்கமான வேலை வாய்ப்புகளை விடவும் வித்தியாசமானவற்றை விரும்புவீர்களா? இயக்கங்களில் ஈடுபாடு இருக்கிறதா? இந்தப்படிப்பு உங்களுக்குப் பொருந்தி வரும். பயிற்சி இணை அஞ்சல் வழியிலேயே படித்து முடிக்கலாம். இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போது உள்ள மையங்களை விடப் புதிய மையங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இயக்கங்களில் பங்கேற்கலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணி புரியலாம். சொந்தமாகவே அத்தகைய நிறுவனங்களை நடத்தலாம். இயற்கைச் சீற்றங்கள் போன்ற தற்காலிகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, உதவிப் பணிகளிலும் ஈடுபடலாம். நிறுவன ஆதரவையும் பெறலாம். பயிற்சி வகைகள் மனித உரிமைகள் பற்றிய படிப்பைப் படிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. பட்டயப் படிப்பாகப் படிக்கலாம். அஞ்சல் வழியிலும் படிக்கலாம். ஓராண்டு, இரண்டு ஆண்டு என்றும் படிக்கலாம். வளர்ச்சிக்கு வழி உங்கள் வேலை வாய்ப்பை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய துறை இது. வழக்கறிஞர் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் இதை இன்னொரு சிறப்புப் பணியாக எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள், இந்தப் பயிற்சியைப் பெறுவது, பல வழிகளிலும் உதவக்கூடும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அவசியமானது. தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. பிணக்குகளும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டு அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எங்கும் எழுகின்றன. வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் முதற்கொண்டு பெரிய பெரிய பதவிகளை வகிப்பவர்கள் வரை எல்லோருக்கும் இந்தப் பயிற்சி தேவைப்படுகிறது. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், குடியமர்வு அதிகாரிகள் போன்ற பலருக்கும் இது பற்றி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் இம்மாதிரிப் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கே நீங்கள் கற்றுத் தர வேண்டிய சூழ்நிலையும்கூட வரலாம். நீங்கள் உங்கள் கொள்கையில் காட்டும் தீவிரத்தின் மூலம் பெரும் புகழும் பெறலாம். பன்னாட்டளவிலான விருதுகள், பாராட்டுக்கள் உங்களைத் தேடி வரும். மனித உரிமைகள் பற்றிய படிப்பு விவரங்கள், குறிப்புகள், முகவரிகள் : பிஹிவிகிழி ஸிமிநிபிஜிஷி றிநிறி வீஸீ பிuனீணீஸீ ஸிவீரீலீts 2 சீக்ஷீs (சிஷீக்ஷீக்ஷீமீsஜீ) கிஸீஹ் ஞிமீரீக்ஷீமீமீ மிஸீபீவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ பிuனீணீஸீ ஸிவீரீலீts நிக்ஷீமீமீஸீ நிணீtமீ, கி/15 றிணீக்ஷீவீஹ்ணீஸ்ணீக்ஷீணீஸீ சிஷீனீஜீறீமீஜ் ஷிணீளீமீt, விணீவீபீணீஸீ நிணீக்ஷீலீவீ, ழிணிகீ ஞிணிலிபிமி - 110 030, ஞிணிலிபிமி - றிலீ: 6532930 6532 850 திஜ்: 6858609 பிஹிவிகிழி ஸிமிநிபிஜிஷி வி.கி. சிஷீuக்ஷீsமீ வீஸீ பிuனீணீஸீ ஸிவீரீலீts 2 சீமீணீக்ஷீ நிக்ஷீணீபீuணீtவீஷீஸீ வீஸீ ணீஸீஹ் stக்ஷீமீணீனீ ணீt றீமீணீst 50 ஜீமீக்ஷீ நீமீஸீt னீணீக்ஷீளீs, கிறீவீரீணீக்ஷீலீ விusறீவீனீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ். கிலிமிநிகிஸிபி - 202 002 பிஹிவிகிழி ஸிமிநிபிஜிஷி றிஷீst-நிக்ஷீணீபீuணீtமீ ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ பிuனீணீஸீ ஸிவீரீலீts ணீஸீபீ ஜீமீணீநீமீ 1 ஹ்மீணீக்ஷீ, பிஹிவிகிழி ஸிமிநிபிஜிஷி றிநி ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ லீuனீணீஸீ க்ஷீவீரீலீts 1 சீமீணீக்ஷீ றிஷீஸீபீவீநீலீமீக்ஷீக்ஷீஹ் ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ், ஸி.க்ஷிமீஸீளீணீtணீக்ஷீணீனீணீஸீ ழிணீரீணீக்ஷீ, ரிணீறீணீஜீமீt, றிளிழிஞிமிசிபிணிஸிஸிசீ - 605 014, றிளிழிஞிமிசிபிணிஸிஸிசீ. அகழ்வாராய்ச்சி. வரலாறு படித்தவர்கள், இந்தத் துறையில் விவரமாக வேலை வாய்ப்பைப் பெறலாம். இத்தனை வேலைப் பிரிவுகள் இதில் இருக்கின்றனவா என்று நீங்களே ஆச்சரியப்படலாம். அதற்கான முயற்சிகளை இப்போதே தோண்டித் துருவிப் பார்க்கத் தொடங்குங்கள். அகழ்வாராய்ச்சி என்றால் ஏதோ தோண்டிப் பார்ப்பது என்று மட்டும் சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். அப்படி அல்ல. எங்கு வேண்டுமானாலும் தோண்டிப் பார்ப்பது புத்திசாலித்தனமாகுமா? ஆகாது. ஆகவே எங்கே தோண்டவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கே பெரும் திறமை தேவைப்படும். அகழ்வுப் பணிகளை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அளவுகளைக் குறிக்க வேண்டும். அரிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கவனமுடன் கையாள வேண்டும். மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்கு அனுப்பவேண்டும். தோண்டி எடுத்ததை ஆராய வேண்டும். காலத்தை நிர்ணயிக்க வேண்டும். தோண்டி எடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். சிதைவிலிருந்து காக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்று எத்தனையோ வேலைகள் உண்டு. உங்களுக்கு வரலாறு, புவியியல், நிலவியல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கிறதா? வரலாறு படிக்கத் தொடங்கலாம். +2வுக்குப் பிறகு பட்டப் படிப்பு, இதில் தொல்லியலை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம். இந்திய வரலாறு, வெவ்வேறு காலக் கட்டங்களிலான வரலாறு போன்றவற்றையும் படிக்கலாம். அதன் பின் பட்ட மேற்படிப்பு, பட்டப் படிப்பிற்குப் பின் அல்லது பட்ட மேற்படிப்பிற்குப் பின் பட்டயப் படிப்பும் படிக்கலாம். ஆராய்ச்சிப் படிப்பிலும் சேரலாம். நீங்கள் சிறந்த தொல் பொருள் ஆய்வாளர் ஆக வேண்டுமானால் இளம் வயதிலேயே எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த ஊர் குக்கிராமமாக இருக்கலாம். அங்கு ஏதோ ஒரு மண்மேடு காணப்படலாம். குன்று என்று சொல்வார்கள். ஆனால் அது இயற்கையானதாக இருக்கத் தேவையில்லை. மூதாதையர் விட்டுச் சென்ற பொருட்கள், கட்டடங்கள் புதையுண்டு போயிருக்கலாம். கவனியுங்கள். வரலாற்றையே மாற்றி அமைக்கக் கூடிய உண்மைகளைக் கண்டறிந்து சொல்வீர்கள். நீங்கள் எத்தனையோ பாடுபடுகிறீர்கள், இது வீணாகப் போவதில்லை. வரலாற்றில் நிலைத்தவர்களின் பெயர்களை நிலைநாட்டி நீங்களும் அதில் இடம் பெறுவீர்கள்தானே? வெளிநாட்டு வாய்ப்பு வெளிநாடுகளில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பிரச்சனை வேறு! இருப்பினும் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. நீங்களே அனுமதி பெற்ற பணிகளை மேற்கொள்ளச் செல்வதாய் இருக்கலாம். அரசின் ஆணையின் பேரில் செல்வதாகவும் அமையலாம். அல்லது வேற்று நாட்டு அரசுகள் கேட்டுக் கொள்வதாலும் சென்று வரலாம். இதே துறையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அறிஞர்களின் குழுவில் நீங்களும் இடம் பெறலாம். வெளிநாட்டவர்கள் இங்கே ஆய்வு செய்ய வந்தாலும் உதவலாம். உலகமே ஒரு குடும்பம் என்பதை நடைமுறையில் அனுபவிக்கலாம். மேலும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அருங்காட்சியகம், வரலாற்றுத் துறையில் வாய்ப்புகள் உண்டு. தனித்தன்மை வரலாறு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சும்மா இருக்கும் நீங்கள் எடுக்கும் முடிவால் உங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு கிடைக்காது. உலகத்துக்கே அது உன்னதமானதாக அமையும் தொல்லியல், அகழ்வாராய்ச்சி தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள், தொடர்பு முகவரி கிஸிசிபிணிகிலிளிநிசீ றி.நி ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ கிக்ஷீநீலீணீமீஷீறீஷீரீஹ், 1 சீக்ஷீ, விணீபீuக்ஷீணீவீ ரிணீனீணீக்ஷீணீழீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ், றிணீறீளீணீறீணீவீ ழிணீரீணீக்ஷீ, விணீபீuக்ஷீணீவீ - 625 021