பிளஸ் 2 முடிக்காதவர்களுக்கு அரசுப் பணி ?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2008-ஆம் ஆண்டு குரூப் 2 வுக்கான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தியது. அதில் பங்கேற்ற, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலைப் பட்டம் பெற்ற சிலரின் தேர்வு

முடிவுகள் வெளியிடாமல் அவர்களை டிஎன்பிஎஸ்சி நிகராகரித்து.

அந்த உத்தரவை ரத்து செய்து அரசுப் பணியில் நியமனம் செய்ய வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு முதலில் வந்தபோது, பிளஸ் 2 முடிக்காமல், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..

இப்போது நடந்தவிசாரணைக்குப் பிறகு பிளஸ் 2 முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்று குரூப் 2 தேர்வு எழுதியவர்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிராகரித்தது சரிதான்.

ஆனால், அரசாணை அடிப்படையில் பட்டப்படிப்பு செல்லாது என்பதை முடிவு செய்ய முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையில்தான் பட்டப்படிப்பு செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேரலாம் என யுஜிசி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டம் பெற்றது செல்லும். எனவே நுழைவுத் தேர்வு எழுதி அதன் மூலம் முதுநிலைப் பட்டம் பெற்று, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

மேலும் நுழைவுத் தேர்வின் உண்மைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் நகலை இணைத்தவர்கள் ஒரு மாதத்துக்குள் உண்மை சரிபார்த்து அவர்களைப் பணியில் நியமனம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த 3 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், முதல் தலைமுறை மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச பட்டப் படிப்பை பெற முடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.