உளவியல்

shutterstock 137316659 1
PSYCHOLOGY
“மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,” ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை. ஏனெனில் உள்ளம் என்பது ஒரே வகையான இயக்கமும் தன்மையும் கொண்டதல்ல.
பிளஸ் 2 வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர் தைரியத்தை தனது பெயராகக் கொண்ட மாணவி தைரியலட்சுமி. தமிழ் வழியில் படித்தவர் ஆங்கில மொழிவழியில் பொறியியல் கற்க இயலாது என்ற தோற்றுப் போன உணர்வால் கல்லூரியில் சேர்ந்த ஓராண்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
21ம் நூற்றான்டின் முக்கிய நோயாக மனஅழுத்தம் மாறி வருகிறது. அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது.
ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம், அரவணைப் இல்லாமல் தொடரும் உறவுகளுக்கு இடையிலான இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது.

இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் இது போன்ர நிகழ்வுகள் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். மன அழுத்தம், மன நெருக்கடி, மன நல பாதிப்பு ஆகியவைகள் உளவியல் பிரச்சனைகள் என்றழைக்கப்படுகிறது.
உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும். மனதில் ஏற்படும் பிரச்சனைகள் உடலின் எல்லா பாகங்களையும் சென்றடைகிறது. ஆகவே நமது தினசரி வேலைகளை கவனமுடன் சிறப்பாக செய்ய நல்ல மனநலம் அவசியம்.
இதற்கு ஓர் மனநல ஆலோசகர் மூன்று விதமாக உதவுவார்.
1. பிரச்சனைகளை சரி செய்வார் 2. பிரச்சனைகள் வருவதை தடுக்க வழிமுறைகளை ஆலோசனை தருவார். 3. வாழ்வை மேலும் வளமானதாக ஆக்க உதவுவார்.
மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மனநல மருத்துவராக உருவாக +2 வுக்கு பின் கல்லூரியில் தேர்வு செய்ய வேண்டிய பாடப்பிரிவு B.Sc. (Psychology).
இந்த பாடப்பிரிவு காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகிறது.
உளவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. * கிளினிக்கல் மற்றும் கம்யூனிட்டி உளவியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் உளவியல் காரணங்கள் பற்றி ஆராயும் படிப்பாகும்.
...
குழந்தை உளவியலும் குடும்ப உறவுகளும்
ஒரு மனிதன் பிற்காலத்தில் நல்லவனாக கெட்டவனாக உருவாதற்கான அத்தனை உளவியல் விதைகளும் அவனுடைய ஐந்து வயதிற்குள்ளேயே விதைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தான் குழந்தை வளர்ப்பில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறோம். குழந்தை அனைத்து விஷயங்களையும் தன்னுடைய குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்திருந்து கிரகித்துக் கொள்கிறது. ஆக இது போன்ற குழந்தை சூழலைப் பற்றிப் பயில்வதும் உளவியலின் ஒரு கூறு.
IGNOU வழங்கும் கல்விப் பட்டியலில் இந்தப் பிரிவு உள்ளது.
ஞ்.
மருத்துவ உளவியல்
நம்மில் பெரும்பாலோருக்கு உடல் ரீதியான நோய்களை விட மன ரீதியான நோய்களே அதிகம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மனம் அறிந்து, அதற்கு உளவியல் சார்ந்த குணப்படுத்தலை மேற்கொள்வதே மருத்துவ உளவியலின் நோக்கம்.
...
கல்வி உளவியல்
தங்கள் மகனையோ, மகளையோ பெரும்பான்மையான பெற்றோர்கள் படிப்புச் சந்தையில் உருட்டப்படும் பகடைக் காய்களாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற மனஅழுத்தங்களுக்கு தீர்வு தருவதே கல்வி உளவியல். இதைத்தவிர, கல்வி கற்பதிலும் கல்வி உளவியல் பயன்படுகிறது. எந்த முறைகளில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்று கல்வி உளவியல் வழிகாட்டுகிறது. இந்தப் பாடப் பிரிவும் IGNOU வழங்கும் படிப்புகளில் உள்ளது.
பட்ட மேற்படிப்பு உளவியலில் சிறப்பு பாடப்பிரிவுகள் பல உள்ளன.
………..
இஸ்லாமிய உளவியல்
நவீன மருத்துவத்தின் தந்தை இபுனு சீனா (கிபி 980 - கிபி 1037) உளவியல் துறையிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கிறார். அவரைப் போல பல இஸ்லாமிய அறிஞர்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின் உளவியலை ஒரு பிரிவாக உருவாக்கியதில் முக்கியமானவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். எனவே எல்லா பாடப்பிரிகள் போலவே உளவியல் பாடப் பிரிவில் மேற்கத்திய சிந்தனையின் தாக்கம் அதிகம்.
அதிலிருந்து மீண்டு இஸ்லாமிய அடிப்படையில் உளவியலை மாணவிகளுக்கு வழங்குகிறது அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி.
மேலும் விபரங்களுக்கு :
+91 75984 61650
+91 99438 91221
E-mail : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.annaikhadeeja.in/