பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017 அன்று நடைபெற்றது. சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து சிறப்புரை ஆற்றினார்.
நபிகளார் காலம் முதல் கல்வித் துறையில் பெரும் சாதனைகள் புரிந்து அதன் மூலம் மனித சமூக உயர்வுக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள். இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் தங்களது அலட்சியத்தால் உலகில் எல்லா மட்டத்திலும் பின் தங்கிப் போனார்கள். மீண்டும் முஸ்லிம்கள் முதன்மைச் சமூகமாக முன்னோடி சமூகமாக மாறுவதற்கு கல்வித் துறையில் கால் வைத்து பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தி மக்களிடத்தில் விதைக்கப்பட்டது.