கோவையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி

கோவையில் 17.09.2017 அன்று பொற்காலம் திரும்பட்டும் விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. CMN சலீம் அவர்கள் ஒளிப்படக் காட்சிகளுடன் இஸ்லாமிய கல்வி வரலாற்றை விளக்கப்படுத்தினார்.
மேலும் தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை இஸ்லாமிய வகுப்புகள் இணைக்கப்பட வேண்டும். உயர்கல்வி பயிலும் இன்றைய மாணவர்கள் சமூகத்திற்கு அறிவையும் அதிகாரத்தையும் வழங்கும்..... தத்துவம் மற்றம் இயற்கை அறிவியல் படிப்பிற்கு முதன்மைத்துவம் வழங்க வேண்டும். இந்தக் கருத்துக்களை இன்ஷா அல்லாஹ் இன்னும் 50 ஆண்டுகள் சமூகத்தின் சிந்தனையில்
விதைத்துக் கொண்டே இருப்பதற்கு.... ஒவ்வொரு முஹல்லாவிற்கும் ஒரு கல்விச் சிந்தனையாளரை உருவாக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.