சென்னை புதுக் கல்லூரியில் OMEIAT பொதுக்குழு கூட்டம்

25.09.2017 அன்று சென்னை புதுக் கல்லூரியில் OMEIAT  - (Organisation of Muslim Educational  Institutions and Associations of Tamil Nadu) தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்களை இணைக்க வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.
தமிழக பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைப்புக் குழுவின் தலைவர் முனைவர் அனந்த கிருஷ்ணன் அவர்கள் பள்ளிக்கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.