ரியாத் மற்றும் ஜித்தாவில் “கல்வி வரலாறு” இரண்டுநாள் பயிலரங்கம்.

ரியாத் நகரில் அக்டோபர் 13, 14 ஆகிய இரண்டு நாட்களும், ஜித்தா நகரில் அக்டோபர் 26, 26 இரண்டு நாட்களும் “இஸ்லாமிய வரலாற்றில் கல்வி” என்ற இரண்டு நாள் பயிலரங்கங்கள் நடைபெற்றது. 

1400 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகம் கல்வி வழியாக உலகச் சமூகத்தின் வாழ்க்கையை வளமாக்கியது என்பதுதான் வரலாறு. அதில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இது உலக வரலாற்றில் முஸ்லிம் சமூக கடந்து வந்த பாதை.
இனி முஸ்லிம் சமூகம் ஆற்ற வேண்டிய பணிகள் : தமிழக முஸ்லிம் சமூகத்தின் கல்வித் துறையை ஹலாலான பாதைக்கு மாற்றி அமைப்பது மேலும் ஆளுமைமிக்க அறிவை நுணுக்கமாக பெற்ற முஸ்லிம் சமூகம் என்ற நிலையை அடைய வேண்டுமானால் தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி (Primary to Ph.D) வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். உயர்கல்வியில்ஆண்கள் ஆய்வுக் கல்வி (Ph.D) வரை பயில வேண்டும். பெண்கள் கல்வித் துறையை (Education Sector) தேர்வு செய்ய வேண்டும். இது இந்த இலக்கை இலக்கை அடையும் வழிமுறை தியாகம் இவை குறித்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தக் கருத்துக்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து சமூகத்தின் சிந்தனையில் விதைத்துக் கொண்டே இருப்போம். ஒவ்வொரு முஹல்லாவிற்கும் ஒரு கல்விச் சிந்தனையாளரை உருவாக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்வோம்.