“நாளைய உலகம் நமதாகட்டும்“ ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் உம்மத்திற்கு உயர்கல்வியில் இலக்கு நிர்ணயிக்கும் “நாளைய உலகம் நமதாகட்டும்“ நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்... இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 150 முஹல்லாக்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வழிகாட்டப் போகும் உயர்கல்வி ஆலோசகர்களுக்கான பயிற்சி வகுப்பு அன்னை கதீஜா கல்லூரியில் நடைபெற்றது. வளரும் தலைமுறைக்கு சரியாக வழிகாட்டாத சமூகம் ஒருநாளும் வளர்ச்சி அடைய இயலாது. எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் முகமாக உங்கள் ஊரில் “நாளைய உலகம் நமதாகட்டும்“ என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்திட முன்வாருங்கள்.