ஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய தலாக்

சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஷரீஅத் பேரவை சார்பில் சென்னையில் 11.12.2017 அன்று நடைபெற்றது.

மூத்த உலமாக்கள் இயக்கங்களின் தலைவர்கள் சமுதாயப் புரவலர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம்களிடமிருந்து ஷரீஅத்தை அந்நியப்படுத்த வேண்டும் என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு அதற்காக 90 ஆண்டுகள் உழைத்து படிப்படியாக காய்நகர்த்தி வந்துள்ளனர் பா.ஜ.க. இப்போது அசுர பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சட்டத்தின் உதவியோடு ஷரீஅத்திலும் கை வைக்கின்றனர். உடனடியாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நாம், அதே நேரம் நிரந்தரமான தீர்வை நோக்கி சமூகத்தை நகர்த்தினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும். இன்றைய நெருக்கடியான காலத்தில் மார்க்க சேவையாற்றும் ஆலிம்களை சமூகத்திற்காக சிந்திக்கும் அறிஞர்களை களத்தில் நின்று போராடும் சமுதாய தலைவர்களை ஊக்கப்படுத்துவோம். நம் பிள்ளைகளை ஷரீஅத்தை படித்து சர்வதேச சட்டத்தையும் படித்து ஆங்கில மொழிப் புலமையோடு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களை ஆட்டுவிக்கும் மேதைகளாக்குவோம் என்று கருத்துரைத்தார் சமூகநீதி முரசு ஆசிரியர் C.M.N.சலீம்.sharee ath peravai (1)