நெல்லை பேட்டையில் நூலகத் திறப்பு விழா

17.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி பேட்டை கல்லுப்பள்ளி வளாகத்தில் அபூஹூரைரா [ரழி] நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. உலக வரலாற்றின் மத்திய காலத்திலும் முஸ்லிம்களின் பொற்கால வரலாற்றிலும் நூலகங்கள் இல்லாத பள்ளிவாசலே கிடையாது. வாசிப்பை முஸ்லிம்கள் மூச்சுபோல சுவாசித்தனர். கோடிக்கணக்கான நூல்களைக் கொண்ட உயர்தரமான நூலகங்கள் தான் முஸ்லிம்களின் கல்விக் கூடமாக சமூகத்தை செழுமையாக்கிய ஞானிகள் உருவான அறிவுக் கூடமாக விளங்கின. ஆனால் இன்று...? என்ற கேள்வியோடு சமூகத்தில், மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்கிப் பேசினார் சமூகநீதி முரசு ஆசிரியர் C.M.N.சலீம். சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்துலக ஜாம்பவான் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களும் விழாவில் பங்கேற்றார். பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

nellai pettai (2)