பரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா

23.12.2017 சனிக்கிழமை அன்று பரங்கிப்பேட்டையின் மதிப்புமிக்க வரலாற்றை தக்க தரவுகளோடு ஹமீது மரைக்காயர் அவர்கள் எழுதிய “மஹ்மூத்பந்தர் ” என்ற நூல் வெளியீட்டு விழா பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது. சமூகத்தை ஆவணப்படுத்தும் இந்தப் பணி எல்லோராலும் செய்ய இயலாத சமூக அக்கறை கொண்ட மகத்தான பணி. வணிகத்தில் தமிழக முஸ்லிம்கள் தாங்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க இளைஞர்களே! தமிழக முஸ்லிம்களின் இன்றைய கல்வி... கலாச்சாரம்... பொருளீட்டல்... ஆகிய மூன்று துறைகளையும் நமது பாரம்பரியத்தின் நிழலில் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வரலாற்றை வாசியுங்கள் அது உங்களின் அறிவுப் பார்வையை விசாலமாக்கும். இயக்க எல்லைகளைத் தாண்டி என் உம்மத் என்று முஸ்லிம்கள் அனைவரையும் அரவணைக்க வைக்கும் என்று ஊக்கப்படுத்திப் பேசினார் சமூகநீதி முரசு ஆசிரியர் C.M.N.சலீம். விழாவில் தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் புதுக்கோட்டை ராஜா முஹம்மது அவர்களும் பங்குகொண்டார்.

parangipet 1