அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய மழலையர் பள்ளி துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவது குறித்த பயிலரங்கம் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து மூன்று நாட்களும் சமூகநீதி முரசு மாத இதழ் ஆசிரியர் C.M.N.சலீம் ‘இஸ்லாமிய கல்வி வரலாறு’ என்ற தலைப்பிலும், இஸ்லாமிய மனித வள மேம்பாட்டாளர் எஸ்.ஏ. மன்சூர் அலி ‘இஸ்லாத்தில் தலைமைத்துவம்’ என்ற தலைப்பிலும், அன்னை கதீஜா கல்லூரியின் தாளாளர் சயிதா பானு குழந்தை உளவியல், இஸ்லாமிய பள்ளி

3 days 2துவங்குவதன் அவசியம், வாசிப்பு என்ற தலைப்புகளிலும் ஒளிப்படக் காட்சிகள் வழியாக விரிவாகப் பேசினார்கள். முனைவர் சீர்காழி எஸ்.ராமதாஸ் அவர்கள் “பள்ளிக்கூடங்கள் நடத்தும் போது ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் பேசினார்.

இரண்டாம் நாள் நாகப்பட்டினம் இலாஹியா நர்சரி பள்ளியின் தாளாளர் சகோ ஆரிஃப், கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை சகோதரி ரூத் பிரின்சஸ் அறிவொளி எம்.ஏ.பிஎட் மற்றும் கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாஃபர் சுலைமான் ஆகியோர் இன்றைய சூழலில் அரசு, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் மூலமாக பள்ளிகள் சந்திக்கக் கூடிய ஆழமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் வழங்கினர்.

3 days 5

மூன்றாம் நாள் புதுக் கல்லூரி வேதியல் துறை இணை பேராசிரியர் அப்துல் கமால் நாசர் எம்.எஸ்.சி., எம்.ஃபில்., பள்ளிக்கூடம் துவங்குவதற்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் அரசு விதிமுறைகள் குறித்தும், நாலெட்ஜ் அகாடமியின் தாளாளர் சகோதரர் அஸ்கர் தரமான பள்ளிகளின் தேவை குறித்து பேசினர்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃபைசல் அஹமது வரவேற்புரை வழங்கினார். அன்னை கதீஜா கல்லூரியின் பொது மேளாலர் ஹாரூன் ஷரீஃப் நன்றியுரைத்தார்.மூன்று நாள் பயிலரங்கில் பள்ளி கல்லூரி முதல்வர்கள் ஆசிரியர்கள் கல்வி மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் அன்னை கதீஜா கல்லூரியின் இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் பலர் இன்ஷா அல்லஹ்... வருகின்ற கல்வியாண்டு முதல் தங்களது முஹல்லாக்களில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களை துவங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர் நாமும் துஆ செய்வோம்.

3 days 4