திருச்சியில் இளைஞர் எழுச்சி மாநாடு

14/01/2018 அன்று திருச்சியில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில் இளைஞர் எழுச்சி மாநாடு தென்னூர் பள்ளிவாசலில் நடத்தப்பட்டது.

ஒரு சமூகம் வளர்ச்சி அடைவதற்கு வளரும் தலைமுறைக்கான வாழ்வியல் இலக்கை சமூக தலைமை தீர்க்கமாக வரையறுத்துக் கொடுக்க வேண்டும்.
அந்த இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை அவர்களுக்கு தெளிவாக வகுத்துக் கொடுத்து... அதை ஒவ்வொரு கால இடைவெளியிலும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை இளைஞர் எழுச்சி மாநாடு மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் விழாவில் பேசினார்.

trichy 6