தாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா

பிப்ரவரி 7 ஆம் தேதி தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் பள்ளியில் மூன்றாம் வருட விளையாட்டு தின விழா அன்னை கதீஜா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை திருமதி ரூத் பிரின்சஸ் அறிவொளி எம்.ஏ., பி.எட். அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவிகள் மிகச் சிறப்பாக அணிவகுப்பு நடத்தினார்கள். அடுத்து வகுப்பு வாரியாக பல்வேறு வடிவங்களை உடற்பயிற்சி மூலம் செய்துகாட்டி மாணவிகள் விழாவுக்கு மெருகூட்டினார்கள்.
மேலும் ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல், போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தாளாளர் சயிதா பானு, மேலும் அன்னை கதீஜா கல்லூரியின் தலைமை ஆசிரியை திருமதி சுமதி, தாருஸ்ஸலாம் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஃபைரோஸ் எம்.சி,ஏ., பி.எட். ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள். தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியைகள் அனைவரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.