புத்தாநத்தத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர் புத்தாநத்தம். ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் வளர்ந்து வரும் ஊர். அதிகமான மார்க்க அறிஞர்களை தமிழகத்திற்கு தந்துள்ள ஊர்.
நூரே அஹ்மதிய்யா பைத்துல்மால் சார்பில் 11.2.2018 அன்று கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. வளரும் தலைமுறைக்கு கல்வியிலும் வணிகத்திலும் இலக்கு நிர்ணயித்து உருவாக்குவது குறித்த வழிமுறைகளை முன்வைத்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் உரையாற்றினார்.