அருப்புக் கோட்டை “இக்ரா மெட்ரிக் பள்ளிக்கூட ஆண்டு விழா”

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மார்க்கக் கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து அர்ப்பணிப்போடு வழங்கும் கல்வி நிறுவனம். இக்ரா மெட்ரிக் பள்ளி. அதன் ஆண்டு விழா 18.3.2018 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் கலந்து கொண்டார்.

இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் ஊர் தோறும் பெருக வேண்டும். தொலை நோக்கு இலக்குடன் அர்ப்பணிப்பு சிந்தனையும் நிறைந்த சமூக ஆர்வலர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் பயிலும் பிள்ளைகள்..... வெறுமனே படித்தவர்கள் பட்டதாரிகள் என்ற அடையாளத்தை தாண்டி சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்த வாதிகளாக உருவாகி வருவார்கள் என்ற செய்தியை தன் பேச்சில் பதிவு செய்தார்.