சென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா

10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள i MAX நர்சரி & பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இஸ்லாமியப் பாடத்தோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்றுத்தரும் திட்டத்தில் 2003 இல் சென்னையில் அமைக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பள்ளிக்கூடம்.
ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம்கள் பிழைப்பதற்கு ஒன்டிக் கொண்டிருக்கும் சென்னை என்ற மனிதப் பன்ணையில் மார்க்க கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்பிக்க குறைந்தது 150 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் தேவை. இப்போது இருப்பது வெறும் 20 - 25 பள்ளிக் கூடங்களே.
சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முஸ்லிம்கள் அடுத்து 10 ஆண்டுகளுக்கு தங்களது சுய தேவைகளை குறைத்துக் கொண்டு கல்விப் பணிகளுக்கு அதிகமாக நிதியுதவி செய்தால் கல்வியில் சமூகம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை என்ற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் மக்களிடம் எடுத்துவைத்தார்.