தொண்டி

07.07.2018 அன்று பள்ளிவாசலில் தங்கி காலையில் பள்ளிப்படிப்பும் மாலையில் குர்ஆன் மனனம் பாடப்பிரிவும் இணைக்கப்பட்ட நயீமிய்யா அரபிக் கல்லூரியின் துவக்க விழா நிகழ்ச்சி தொண்டி கடற்கரை பள்ளிவாசலில் நடைபெற்றது.
மார்க்க கல்வி உலக கல்வி இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உருவாக வேண்டும் அது பள்ளிவாசலில் இடம் பெற வேண்டும் என்று தமிழக முஸ்லிம் உம்மத்தில் கடந்த 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக விதைத்த கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிட துவங்கியுள்ளது. இன்னும் அதை வேகப்படுத்திட வேண்டும். மார்க்கத்தை முறையாக படித்த தமிழக முஸ்லிம் உம்மத் உருவாக வேண்டும். இன்று உம்மத் எதிர்கொள்ளும் அனைத்து வகையான சிக்கல்களும் அகல அதுவே தீர்வு என்று சமூகநீதி முரசு ஆசிரியர் சிவிழி சலீம் தன்னுடைய சிறப்புரையில் குறிப்பிட்டார்.
நகர ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தொண்டி ஐக்கிய ஜமாஅத் பொறுப்பாளர்களும் சுற்று வட்டார ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஆலிம்களும் கலந்து கொண்டனர்.