குடவாசலில் கைராத்துன் ஹிஸான் மகளிர் மதரஸா துவக்க விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள பரக்கத்தாபாத்தில் “கைராத்துன் ஹிஸான் மகளிர் மதரஸா” வின் துவக்க விழா நிகழ்ச்சி 29.07.2018 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமூகநீதிமுரசு ஆசிரியர் cmn சலீம் சிறப்புரை வழங்கினார். தனது உரையில் : செல்வம் வழங்கப்பட்டவர்களின் உள்ளத்தில் மார்க்கச் சிந்தனையும் சமூகப் பார்வையும் வளர்ச்சி அடைகிறது என்றால் அது அல்லாஹ்வின் கருணையும் அருளும் அவர்கள் மீது படரத்துவங்குகிறது என்பதின் அடையாளம் என்பதையும், முஸ்லிம் உம்மத்தின் கல்வித்துறையை இன்றைய அறிவியல் தொழில்நுட்ப காலத்திற்கேற்ப இஸ்லாமிய பாதைக்கு சீரமைக்கும் பணிகளை இன்னும் ஆழமாக வேகமாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அரபிக்கல்லூரி முதல்வர்கள் மூத்த உலமாக்கள் சுற்றியுள்ள மஹல்லாக்களின் பொறுப்பாளர்கள் அரபிக்கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.kudavasal 1