திருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் செஞ்சி நகரம் சார்பில் 15,16.09.2018 ஆகிய இரண்டுநாள் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
தமிழக முஸ்லிம் உம்மத்தில் கல்வி மற்றும் சமூகத் துறைகளுக்கு தலைமைத்துவ ஆற்றலுடைய சிந்தனையாளர்களை உருவாக்கும் இந்த இரண்டுநாள் பயிலரங்கில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் பேரா.நீடுர் மன்சூர், நல்லசோறு முருகன், பூஉலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், எழுத்தாளர் இமயம், சமூகநீதிமுரசு இணை ஆசிரியர் மெளலவி வலியுல்லாஹ் ஸலாஹி ஆகியோரும் பங்கு பெற்று இன்றைய கல்வி உணவு மருந்து நிலத்தடிநீர் சுற்றுச்சூழல் வளங்களை சூறையாடுதல் என நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் கல்வித்துறை கடந்து வந்த பாதை, இன்றைய நமது கல்வி நிலை அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் இனி நமது இலக்கும் அதை நோக்கிய பயணமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வடிவத்தை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் படத்தொகுப்பு காட்சிகளாக விவரித்தார்.
ஒட்டுமொத்த உம்மத்தின் வளர்ச்சி என்ற விசாலமான உள்ளத்தோடு சமூகப்பணியாற்றும் அறிவுஜீவிகளை உருவாக்கும் தடத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. அல்லாஹ் அதற்கான பலனை வழங்குவானாக. ஆமீன்