கோட்டைப்பட்டினத்தில் இளைஞர் மேம்பாட்டு பயிலரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலில் அல் இஸ்லாஹ் அறக்கட்டளை சார்பில் இளைஞர் மேம்பாட்டு பயிலரங்கம் 15-12-2018 அன்று நடைபெற்றது. நாகர்கோவில் கலாச்சாரப் பள்ளியின் தலைமை இமாம் மெளலவி ஷவ்கத் அலி உஸ்மானி அவர்களும் சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களும் கலந்து கொண்டார்கள். “இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டினால் அதன் பலனும் நன்மைகளும் சமூகத்திற்கே திரும்ப கிடைக்கும்” என்கிற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். நிழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.