முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

15977963 1204590549610709 5393515198634929629 n

இஸ்லாமிய சமூகம் கல்வியில் மேம்பாடு காண முன்னேற வேண்டும். அல்லாஹ்வை அறிந்து அதன் வழி உலகின் அனைத்து அறிவுகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்ட பயிற்சி முகாம் கடந்த நவம்பர் 2016 இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் 2017 ஜனவரி 14 ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதில் இருந்தும் வந்த 80 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
CMN.சலீம் – கல்விப் பணியில் நமது இலக்கு
எச்.ஏ.மன்சூர் அலி – தலைமைப் பண்பு
கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ழரி - சமூகப் பணிக்கு மனதை தயாராக்குவது
ஹாஜா ஷரீஃப் – சமூகப் பணி, ஆகியோர் மேற்கண்ட தலைப்புகளில் சிறப்பாக பயிற்சி அளித்தார்கள்.