அமீரகத்தில் கல்வி வரலாறு சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழக முஸ்லிம்களின் அறிவை இஸ்லாமியப்படுத்தும் முனைப்போடு செயலாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அமீரகம் சார்பில் துபாய் மற்றும் அபுதாபியில் கல்வி வரலாறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
துபாயில் மூன்று நாள் பயிலரங்கம் - துபாய்
இஸ்லாமிய கல்வி வரலாறு குறித்த மூன்று நாள் பயிலரங்கம் ஜனவரி 30,31 பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உலகை ஆளுமை செய்த இஸ்லாமிய கல்வி வீழ்த்தப்பட்ட வரலாறும், ஆளுமைமிக்க தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் அதற்குரிய வழிமுறைகளை விளக்கி சகோ CMN சலீம் உரையாற்றினார். கல்வியாளர்கள், மார்க்க அறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் துபை மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.