அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா!

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில்
விளையாட்டு தின விழா!
15.02.2017 புதன்கிழமை அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியில் “விளையாட்டு தின விழா” நடைபெற்றது.
விழாவில் அதிராம்பட்டினம் காதர் மொய்தீன் கல்லூரியின் கணிதப் பிரிவு விரிவுரையாளர்

முனைவர் திருமதி சுமதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அங்கு நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அன்னை கதீஜா கல்லூரியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் தாளாளர் திருமதி சயீதா பானு எம்.ஏ., பி.எட் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.