மாணவ ஆலிம்களுக்கு சிறப்பு வகுப்பு

2017 பிப்ரவரி 28 அன்று 5 ஆண்டுகள் ஆலிமியத் பாடத்துடன் இளங்கலைப் பட்டப் படிப்பும் இணைக்கப்பட்ட வண்டலூர் ஆலிம் புகாரி அரபிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
சமுதாய வீதிக்கு வரவிருக்கும் இளம் உலமாக்களுக்கு நமது வாழ்வின் இலக்கும் கல்விப் பயணமும் இந்திய முஸ்லிம்களின் சிக்கல்கள் சவால்களைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்று சிவிழி சலீம் வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.