நாச்சியார் கோவிலில் கிரஸண்ட் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி

19.03.107 அன்று தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் ஜாமிஆ பள்ளிவாசல் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெறும் கிரஸன்ட் நர்சரி & பிரைமரி பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். முஸ்லிம் முஹல்லா முழுவதும் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கும் பொறுப்பை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என்று சிவிழி சலீம் வலியுறுத்திப் பேசினார்.