திருச்சியில் “பொற்காலம் திரும்பட்டும்”

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் “ பொற்காலம் திரும்பட்டும் “என்ற கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு பயிலரங்கம் 23.07.2017 அன்று திருச்சி ஃபெமின ஹோட்டலில் நடைபெற்றது.
CMN சலீம் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் அதில் :- கடந்த 1437 ஆண்டுகளாக இஸ்லாம் கடந்து வந்த பாதையை முஸ்லிம்கள் இந்த உலகிற்கு அளித்த அறிவு கொடைகளை பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே முஸ்லிம் பிள்ளைகளுக்கு பயிற்றுவித்திருந்தால் இன்றைய முதலாளித்துவ உலகில் முஸ்லிம்களுக்கு கல்வி ரீதியாக யாரும் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கடந்த 300 ஆண்டுகால முஸ்லிம்களின் வரலாற்றை அறிந்திருந்தால் கூட போதுமானது கல்வி விழிப்புணர்வு வழிகாட்டுதலை விட முஸ்லிம்களின் வரலாற்றை உம்மத்திற்கு பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற இந்த கருத்துக்கள் திரளாக கலந்து கொண்ட மக்களிடத்தில் எடுத்து வைக்கப்பட்டது.