நாகூரில் கல்வி விழிப்புணர்வு கூட்டம்

CMNசலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் பேசும் போது மரைக்காயர்களாக இந்தியப் பெருங்கடலில் சர்வதேச வணிகம் செய்த தொழில் அதிபர்களாக ஆளுமை செலுத்திய நாகூர் அதைச்சுற்றிய ஊர்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் இன்றைய தலைமுறை முதலாளித்துவ கல்வியை படித்து பட்டம் பெற்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்வை தள்ளும் மாத ஊதிய பணியாளர்களாக “ வளர்ச்சி “ அடைந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் பெருகியுள்ள இந்த அவல நிலையை தமிழக கடற்கரைப் பட்டிணங்கள் முழுவதும் பார்க்க முடிகிறது. தமிழக முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை இஸ்லாமிய வரலாற்று பின்புலத்தோடு ஆய்வு செய்பவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளே பொதிந்துள்ள ஆபத்துகள் புரிய வரும் போன்ற கருத்துக்களை மக்கள் மன்றத்தில் பதிய வைத்தார்.