B.Arch., கட்டடக் கலை

 

12

B.Arch., பட்டம் ஐந்தாண்டுகள் படித்தால் பெறக்கூடிய பட்டம். இது பொதுவாக +2 முடித்தவர்கள் எல்லோரும் சேர்ந்து விட இயலாது. அறிவுக்கூறுகள் திரண்ட நிலையில் உள்ள திறன் மிக்கவர்தான் பயில முடியும்.ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி, கணிதத்தில் நல்ல திறமை அத்துடன் கணித

சின்னங்கள் மற்றும் பல்வேறு அளவான வடிவங்களை ஓவியமாகத் தீட்டும் வல்லமை வேண்டும். பொதுவாக பொது அறிவு அதாவது பாட நூல்களைத் தாண்டி  பிற துறை நூல்களால் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவரே இதனை ஐந்தாண்டுகளில் முழுமையாகப்  படிக்க இயலும்.

ஏனெனில் ஒரு கட்டடக் கலைஞர் வெறுமனே  ஒரு வெற்றிடத்தில் தன்  சிந்தனையில் உருவான கட்டிடத்தை எழுப்புபவரல்ல.அவருக்கு புவியியல் அறிவு தேவை. கட்டிடத்தின் இயல்பான காற்று,நீர்,வெளிச்சம் இவைகளைப் பற்றிய அறிவு தேவை .இவைகள் தெரிந்திருந்தால்தான் அதற்கேற்றவாறு,அந்த சூழலுக்கு ஏற்றவாறு கட்டடத்தின் உருவ அமைப்பு, உட்கட்டமைப்பு, காற்றோட்ட வசதிஒளிவரும் வசதி என பல அமைப்பு அம்சங்கள் இடம்பெறுமாறு உரிய வகையில் வடிவமைப்பார்.

இதுவே பல அலுவலகங்கள் இணைந்து செயல்படும் கட்டடம்  ,நகர விரிவாக்கம் எனவும் ஒரு கட்டடக் கலைஞருக்கு அவரின் திறன் கருதி பணி வாய்ப்புகள் கிடைக்கும்.      கட்டடக் கலைஞருக்கு  தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் B.Arch., முடித்தவர்கள் அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை பெறலாம்.அவரவர்களே கூட  தனியாக அலுவலகம் அமைத்து  பணி செய்யலாம். சிலர் கூடுதல் தகுதி பெற M.Arch., முது நிலை பட்டக் கல்வியை தொடர்வார்கள். குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகம் முதுநிலையை பல்வேறு துறைகளில் வழங்குகிறது.

M.Arch.,., பட்டம் பெற்றவர்களை நாடெங்கும் உள்ள பி.ஆர்க்., பட்டக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஆசிரியர் பதவிக்கு இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக உள்ளன .குடில், குடிசை, கூரை  வீடு,மூங்கில் வீடு, ஓட்டு வீடு, மூங்கில் வீடு, மரத்தால் வீடு ,கல் வீடு மண் வீடு எனப் பல வடிவங்களில் தொடக்ககால  மனித இனம் குகையை  விட்டு வெளியே வந்து தனிச் சமூகமாக  வாழத் தொடங்கியது.

முதலாவதாக மனிதனின்  கற்பனைக்கும்  இயற்கையில் கிடைத்த பொருட்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு தனித்தனி வீடுகள் என்ற வசிப்பிடம் அமைக்கத் தொடங்கி காலப் போக்கில் பிரம்மாண்டமான கட்டுமானங்களை காணத் தொடங்கினான்.இந்த கட்டடக் கலையின் உச்சமாகத் திகழ்ந்தது இறை இல்லம் அமைப்பதுதான். கீழ்த் திசை நாடுகளில் பாறைகள், குன்றுகளைக் குடைந்து அதில் தங்கள் திறனை வெளிப்படுத்தியது போல் மத்திய கிழக்கில் பிரம்மாண்டமான இறை இல்லம் அமைத்து உலகின் பார்வையை ,கவனத்தை ஈர்த்த பெருமை அரபு நிலத்திற்குண்டு.அந்த வகையில் இஸ்லாம் அங்கீகரித்த ஒரு தொழிலாக பி.ஆர்க் விளங்குகிறது எனலாம். பள்ளிவாசலின் காற்றோட்டமான பிரம்மாண்ட அரங்கம் அதன் மீதான உருண்டையான கூடு (DOM)அமைத்து அதற்குள் ஓவியங்கள் வேலைப்பாடு நிறைந்த சித்திரம் என விரிவடைந்த கட்டடக்கலை, மனிதர்களுக்கான மாளிகை அமைப்பது. பல சிற்றூர்கள் உள்ளடங்கிய பாதுகாப்பு அரண் கொண்ட கோட்டை கட்டுவது அனைத்தும் இஸ்லாமியக் கட்டுமானக் கலையின் கொடையாகும். கலீஃபா, ஹாரூன் ரஷீத் அவர்கள் காலத்தில் 632 - 661 இல்  தொடங்கப்பட்ட இதன் பயணம் இன்றும் தொடர்கிறது. இஸ்லாமியக் கட்டடக் கலைஞர்கள் திட்டமிட்டு உருவாக்கிய பல நகரங்களின் எழில்தான் பிற்காலத்தில் ஐரோப்பியர்களிடையே தாக்கத்தை உருவாக்கியது எனலாம்.

B.Arch., என்ற  பட்டம் பெறுபவர் மக்கள் பற்றிய வரலாறு,சமூகவியல் ,புவியியலையும் நன்கு அறிந்தவராக இருப்பதுடன் பல இனங்களின் பண்பாட்டையும் அவர் அறிந்தவராக இருக்கும் வகையில் அவரின் பாடத்திட்டம் அமைந்திருக்கும். கணிதத்தில் நல்ல திறனும்,ஆங்கிலத்தில் புலமையும் ஒருங்கே கொண்டிருப்பதே அடிப்படைத் தகுதி .    

B.Arch., வகுப்பில் சேர்க்க +2 மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்தியே தேர்வு செய்கின்றனர்.கீழ்காணும் இடங்களில் B.Arch., சேர்க்கையில் சேரலாம்.

கற்றுத் தரும் கல்லூரிகள்

B.S.Abdur Rahman University

A.M.S. Colleg Avadi

Measi Academy