ஜமாலுத்தீன், திருவள்ளூர்

அப்டோபர் மாத தலையங்கம் சூடாக எழுதப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்தப்பட வேண்டிய அவசர அவசியச் செய்தி. முஸ்லிம் சமூகத்தின் ஓட்டம் இலக்கில்லாமல் இருக்கிறது. தன்னைச் சுற்றி பிரச்சனைகள், நெருக்கடிகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்து உள்ளுக்குள்ளே குமைந்து கொள்ளும் முஸ்லிம் சமூகம் அதிலிருந்து விடுபடும் வழிகளைத் தேடாமல் சும்மா இருப்பது நெருக்கடியை பெரும் நெருக்கடியாக்கி வருகிறது. அதற்கு ஒரு தீர்வை தலையங்கம் தந்துள்ளது. இயக்கங்கள் சிந்திக்குமா?