அப்துல் ஹலீம், திண்டுக்கல்

முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் அக்டோபர் மாத இதழில் சுதந்திரப் போராட்ட வீரர் கம்பம் பீர் முஹம்மது பாவலர் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நான் பெயராக கேள்விப்பட்ட ஒருவரின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பையும், அவரது இலக்கியத் திறனையும் அறிந்து கொண்டேன். முஸ்லிம் சமூகத்தின் முன்னோடி மனிதர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் சகோதரர் சேயன் இபுறாஹீம் அவர்களுக்கு நன்றி.