அப்துல் அஜீஸ், மேலூர்

பல நாடுகளிலும் வகுப்புவாதிகள் அதிகாரத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ‘ரோஹிங்கியாவின் பாதையில் பயணிக்கிறதா இந்தியா’ கட்டுரை எழுப்பும் கேள்விதான் இந்தியாவிலும், இலங்கையிலும், ரோஹிங்கியாவிலும் உண்மை நிலவரம். வகுப்புவாதிகளின் உண்மை முகத்தை பொது மக்களுக்கு அறிய வைக்கும் வழிமுறைகளை மனித நேயமிக்கவர்கள், முஸ்லிம்கள் அறிந்து செயல்படுத்த வேண்டிய தருணமிது.