யாசீன் முகம்மது, பெரம்பலூர்.

இன்றைய சூழலில் உலகம் முழுவதும் திக்கற்று திசை தேடும் அகதிகளாக துயரங்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் முஸ்லிம்கள். ஆப்கன், சிரியா, சூடான், ஈராக், சமீப காலத்தில் ரோஹிங்கியா என தொடர்ந்து சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு இடம் பெயரும் மக்களின் அவல நிலை, எதிர்காலம் பற்றிய செய்திகளைப் படித்த போது வேதனை தருகிறது. துயரங்களை சுமந்து திரியும் நிகழ்காலம், சூன்யமான எதிர்காலம் என வாழ்க்கை முழுவதும் எந்த பிடிமானமும் இல்லாத அகதிகளின் வாழ்க்கையை யோசித்துப் பார்க்கிற அகதிகளுக்கு மட்டுமல்ல. நமக்கும் அச்சம் தருகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக.