ஜலீல் அகமது, கோவை

முதியோரின் கடமைகளும், அவர்களின் உரிமைகளும் கட்டுரை சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. முதுமை அடைந்தவர்களை ஒதுக்கும் பழக்கம் நம்மிடம் அதிகமுள்ளது. முதியவர்களிடமிருந்து வழிகாட்டுதல்கள் வாங்கப்படாமல் உதாசினப்படுத்தப்படுகிறார்கள். அல்லது முதியவர்களின் தொடர் கேள்விகளால் எரிச்சலடையும் இளைஞர்கள் அனுபவங்களை அதிகம் கொண்ட மூத்தவர்களை விட்டும் ஒதுங்கி விடுகிறார்கள். இளைஞர்களும் முதியவர்களும் இடைவயதினரும் ஒத்திசைந்து ஒரு குழுவாக சமூகப் பணி செய்வார்களால் அதுதான் சமூக முன்னேற்றத்தின் முதல்படி. ஷவ்கத் அலி மஸ்லஹி ஆலிம் அவர்களின் இந்தக் கட்டுரையை படித்த போது இந்த எண்ணங்கள் உள்ளத்தை ஆக்ரமித்தது. அல்லாஹ் நம் சமூகத்துக்கு உதவி செய்வானாக.