மீ . ஷாஜகான் M.A ,M.Phil. M.Ed;, தலைமை ஆசிரியர் (ப.நி), திருவிதாங்கோடு --629174.

'சமுக நீதி முரசு' ஜனவரி 2018 மாத இதழ் அண்மையில் பார்வையுற்றேன். மத இதழ்களிலேயே சமூக நீதியை நிலைநாட்டும் மலராக வருவது அறிந்து மட்டிலா மகிழ்ச்சி. 'உண்மையான கல்வி ' குறித்து பேராசிரியர் தரும் சிந்தனை மெய் கல்வியின் பால் நம் சமூகம் முன்னேற நம்மை இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை.ஈஸா (அலை ) நபி பற்றிய இலங்கை அறிஞர் கருத்துக்கள் இஸ்லாய்திற்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஆன்மீகத்தை திருக்குறான் வழி தொட்டு உணர்த்தும் பாங்கே தனிதான்.மக்கள் சேவையாளர் தொண்டி ' கான் சாகிப் ஸையிது முஹம்மது கல்விக்கு வகை செய்து ஆற்றிய பணி தனையும் பொது வாழ்வில் அரசியல் பின்னணி யில் இருந்து செய்த முன்னணிப்பணி தமிழ் பேசும் நல்லுலகம் மலர உதவுவதையும் சேயன் இப்ராகிம் தன் மாய எழுத்துக்களில் மையிட்ட விதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இஸ்லாமியப் பத்திரிகைகளிலேயே தனி இடம் தங்கள் இதழ் பெற்றுள்ளது என்றால் அது மிகையன்று.