தமிழ்குடி, தாம்பரம்

சென்ற மாத அட்டைப்படம் கட்டுரையின் உளடக்கத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தது. கைவிடப்படும் குழந்தைகள்… மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி கட்டுரை ஆழமான தொகுப்பு. இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் உடல் நலிவு மத்திய மாநில அரசுகளால் கவனிக்கப்படாமல் புறக்கனிக்கப்படுவது வேதனைக்குரியது. என்று தீருமோ இந்த அவலம்?